சிவப்பு எறும்பு சட்னி கொரோனாவை கட்டுப்படுத்துகிறதா? ஆயுஸ் பதிலளிக்க கோர்ட் உத்தரவு

சிவப்பு எறும்பு சட்னி கொரோனாவை கட்டுப்படுத்துகிறதா?  ஆயுஸ் பதிலளிக்க கோர்ட் உத்தரவு

பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் காலம் காலமாக சிவப்பு எறும்பு சட்னி சாப்பிட்டு வருகின்றனர்.

சிவப்பு எறும்புகளுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வருவதால், சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துகின்றது என்று அம்மக்களின் நீண்டகால நம்பிக்கையாக இருக்கிறது.

சிவப்பு எறும்பு சட்னி கொரோனாவை கட்டுப்படுத்துகிறதா?  ஆயுஸ் பதிலளிக்க கோர்ட் உத்தரவு

இந்நிலையில், நயாதர் பதியால் எனும் ஆராய்ச்சியாளர் இந்த சட்னி குறித்துகேள்விப்பட்டு அதை ஆராய்ந்து பார்த்துவிட்டு, கால்சியம், அமிலம், புரதம் துத்தநாகம் , விட்டமின் பி12, இரும்பு சத்து, பார்மிக் அமிலம் ஆகியவை இந்த சட்னியில் இருப்பதாக தெரிவித்தார். மேலும், சிவப்பு எறும்பு சட்னி கொரொனாவை கட்டுப்படுத்துகிறது. அதனால் இந்த சட்டனியை சாப்பிடும் பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் வாழும் மக்கள் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பதால் சிவப்பு எறும்பு சட்னி குறித்து ஆய்வு செய்து மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்கும்படி ஆயுஸ் அமைச்சகம் மற்றும் அறியவியல் தொழில்துறை ஆராய்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டிருக்கிறது ஒடிசா நீதிமன்றம்.

சிவப்பு எறும்பு சட்னி கொரோனாவை கட்டுப்படுத்துகிறதா?  ஆயுஸ் பதிலளிக்க கோர்ட் உத்தரவு