பாஜக, பாமகவுக்கு அதிர்ச்சி தந்த தமாகா

 

பாஜக, பாமகவுக்கு அதிர்ச்சி தந்த தமாகா

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ஏற்கிறது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார். கூட்டணியில் உள்ள பாஜக, பாமக கட்சிகள் முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமியை ஏற்காத நிலையில் தமாகா ஏற்றிருப்பது அக்கட்சிகளூக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜக, பாமகவுக்கு அதிர்ச்சி தந்த தமாகா

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளில் பாஜகவும், பாமகவும் தேர்தல் அறிவித்த பின்னர் கூட்டணி கட்சிகளின் கூட்டம் கூடி, அப்போதுதான் முதல்வர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார். ஆனால், தற்போது முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அறிவித்திருப்பது அது அதிமுகவின் செயல்பாடு. அதிமுகவின் செயல்பாட்டுக்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு செயல்பாடு இருக்கும். ஆனால், கூட்டணி கூட்டத்தில் தான் அது முடிவு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தன பாஜகவும் பாமகவும்.

பாஜக, பாமகவுக்கு அதிர்ச்சி தந்த தமாகா

இந்நிலையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்கிறோம் என்று தமாகா ஜி.கே.வாசன் சொல்லி, பாஜக, பாமக கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.