ரிடையர்டான காலத்தில் கட்சி தொடங்கி… முதல்வர் கடும் தாக்கு

 

ரிடையர்டான காலத்தில் கட்சி தொடங்கி… முதல்வர்  கடும் தாக்கு

நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? என்று, சிலர் ஆசைக்கும் தேவைக்கும் ஊரார் கால் பிடிப்பார் என்றும் அதிமுக மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் கமல்ஹாசன்.

ரிடையர்டான காலத்தில் கட்சி தொடங்கி… முதல்வர்  கடும் தாக்கு

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, கமலில் அரசியல் பிரச்சாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘’அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும்? 70 வயது வரை நடித்துவிட்டு, ரிடையர்டான காலத்தில் கட்சி தொடங்கியுள்ளார். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தொடங்கலாம். நான் 1974ல் அரசியலுக்கு வந்தேன். 46 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறேன். 1989ல் சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளேன். அவர் நடிப்பில் வேண்டுமானால் பெரியவராக இருக்கலாம். அரசியலில் ஜீரோ’’ என்றார் காட்டமாக.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, ‘’எங்களுடைய கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன்… நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது’’என்றவரிடம்,

முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பாஜகவின் போக்கு குறித்த கேள்விக்கு, ‘’நாங்கள் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து விட்டோம். எங்களுடைய கூட்டணி தொடர்கிறது. எங்களுடைய தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். இன்னும் தேர்தலே அறிக்கப்படவில்லை. அதற்குள் ஏன் முதல்வர் வேட்பாளரை அறிவித்தீர்கள் என்கிறார்கள். எங்களுடைய கட்சியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வதனால் எங்கள் கட்சி சார்பாக, முதலமைச்சார்
வேட்பாளரை அறிவித்துள்ளார்கள்’’ என்றார்.