ஐயா ரஜினிகாந்த் கலையுலகப் பயணத்தைத் தொடர வாழ்த்துக்கள்..சீமான்

 

ஐயா ரஜினிகாந்த்  கலையுலகப் பயணத்தைத் தொடர வாழ்த்துக்கள்..சீமான்

இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐயா ரஜினிகாந்த்  கலையுலகப் பயணத்தைத் தொடர வாழ்த்துக்கள்..சீமான்

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக செய்திகள் வெளியானது முதல் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார் சீமான். பாபா படத்தின்போது கடுமையாக எதிர்த்த பாமக கூட இப்போது எதுவும் பேசவில்லை. ஆனால், சீமான் மட்டும் கடுமையான எதிர்ப்பினை தொடர்ந்து விமர்சித்து வந்தது.

வேற்று மொழிக்காரர் என்பதால் அவர் எப்படி என் மண்ணை ஆள வரலாம் என்றே சீமான் எதிர்க்குரல் முழங்கி வந்தார். ரஜினியையும், கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில இனி எந்த நடிகனுக்கும் அரசியல் ஆசை வரக்கூடாது என்று ஆவேசம் காட்டி வந்தார் சீமான்.

ஐயா ரஜினிகாந்த்  கலையுலகப் பயணத்தைத் தொடர வாழ்த்துக்கள்..சீமான்

இந்நிலையில், தன் உடல் நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்கப்போவதில்லை என்று இன்று அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த். இப்போ இல்லேன்னா எப்பவுமே இல்ல.. என்று ரஜினியே சொன்னது மாதிரி இப்போது இல்லை என்கிற போது இனி எப்போது இல்லை என்ற முடிவு தெரிந்துவிட்டது. ரஜினியே சொன்னாலும் இனியும் அவரை நம்பி ரசிகர்கள் காத்திருக்கப்போவதும் இல்லை என்று தெரிந்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பு காட்டி வந்த ரஜினி இன்றோடு அந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இதையடுத்து ரஜினியின் முடிவினை வரவேற்றுள்ள சீமான், இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.