பாமக, தேமுதிகவை கழட்டி விடும் பாஜக!

 

பாமக, தேமுதிகவை கழட்டி விடும் பாஜக!

மத்திய அமைச்சரும் பாஜகவின் மேலிட பிரதிநிதியுமான பிரகாஷ் ஜவடேகர், சென்னை வந்து அதிமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

பாமக, தேமுதிகவை கழட்டி விடும் பாஜக!

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக்கவில்லை. அவர் பதில் அளிக்கவில்லை என்றதுமே, அதிமுகவில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுகவின் முரசொலி நாளிதலில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. அத்தோடவாவது விட்டாரா ஜவடேகர். மறைமுக பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணியில் இடமில்லை என்று சூசகமாக தெரிவித்துள்ளார். அதாவது, வாரிசு அரசியலை மக்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

பாமக, தேமுதிகவை கழட்டி விடும் பாஜக!

எல்லா விவகாரத்துக்கு உடனடியகாக சுடச்சுட பதிலளிக்கும் முந்திரிக்கொட்டை அமைச்சர் இதுகுறித்து இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை.
வாரிசு அரசியல் பற்றி பேசியதும், வரிந்துகட்டிக்கொண்டு பாமக தலைவர் மருத்துவர் அய்யாவோ,அவரது அரசியல் வாரிசு அன்புமணியோ வெகுண்டு எழுவார்கள் என்று நினத்திருந்தோம். ஆனால், அதுதான் இல்லை.

பாமக, தேமுதிகவை கழட்டி விடும் பாஜக!

தேமுதிக தலைவர் சார்பில் அவரது மனைவி பிரேமலதா அம்மையாரோ, மைத்துனர் சுதீஷோ, மகன் விஜயபிரபாகரனோ கொதித்து எழுவார்கள் என்று நினைத்திருந்தோம். அதையும் காணோம் என்கிறது.

மேலும், நோட்டாவின் வாக்கு கூட வாங்க முடியாத கட்சி இவர்களை எல்லாம் எப்படி மிரட்டி வைத்துள்ளது என்று ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.