சென்னையில் இருந்து திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 13 பேருக்கு கொரோனா!

 

சென்னையில் இருந்து திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 13 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஐந்து கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் பாதிப்பு குறையவில்லை. கிட்டத்தட்ட 60 நாட்களாக ஊரடங்கு போடப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்ததை கருத்தில் கொண்ட அரசு கடைகள்,தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் செயல்பட அனுமதி அளித்து ஊரடங்கை ஓரளவு தளர்த்தியது. அதனால் தமிழகத்தில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.

சென்னையில் இருந்து திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 13 பேருக்கு கொரோனா!

அதனைத் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் இன்றி செல்லும் எல்லா வாகனமும் மாவட்ட எல்லைகளில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் இருந்து திருப்பூருக்கு திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றவர்கள், உறவினர்கள் வீட்டுக்கு சென்றவர்கள், சென்னையில் தங்கி இருந்தவர்கள் என 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், திருப்பூரில் கொரோனா பாதிப்பு 191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 83 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பி விட்டதால், தற்போது 108 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.