ஓ.பி.எஸ் முயற்சியில் புதிய பாதை… இது எம்.ஜிஆர். போட்ட விதை!

 

ஓ.பி.எஸ் முயற்சியில் புதிய பாதை… இது எம்.ஜிஆர். போட்ட விதை!

கொடைக்கானலுக்கு செல்ல புதிய பாதை உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முக்கிய பாதைகள் உள்ள நிலையில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் பாதை பயண நேரத்தை குறைக்கும் என்பதால், அதாவது 40 கிலோ மீட்டர் தொலைவினை குறைக்கும் என்பதால் பெரியகுளம் – கொடைக்கானல் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும், வியாபாரிகளும் இப்பாதை உருவாக காரணமாக இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஓ.பி.எஸ் முயற்சியில் புதிய பாதை… இது எம்.ஜிஆர். போட்ட விதை!

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானலுக்கு அடுக்கம் வழியாக பாதை அமைத்தது, இவர் மக்களுக்கு செய்த பெரும் உதவி என்று நன்றி தெரிவிக்கிறார்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவி, அடுக்கம் கிராமம் வழியாக இப்பாதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதை வழியாக சென்றால் பெரியகுளத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திலேயே கொடைக்கானலுக்கு சென்றுவிடலாம்.

ஓ.பி.எஸ் முயற்சியில் புதிய பாதை… இது எம்.ஜிஆர். போட்ட விதை!

மலைப்பகுதியில் பயிரிடப்படும் கேரட் உருளைக்கிழங்கு, மிளகு போன்றவற்றை தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரவும், இப்பகுதியில் இருந்து அரிசி உட்பட மக்களின் அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்ல வேண்டுமென்றால், பெரியகுளத்தில் இருந்து தேவதானப்பட்டி, காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்ல வேண்டுமெனில் சுமார் 86 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். பயண நேரம் மணி 3 நேரம் ஆகிவிடும். இதனால் வாகனங்களுக்கு டீசல் செலவு அதிகமாகி வந்தது.

இதை உணர்ந்த ஓபிஎஸ், குறைவான செலவில், குறைவான நேரத்தில் மலைப்பகுதியில் ரோடு அமைத்தார். பயண நேரம், பயண தூரம் குறைப்பதற்கும் இப்பாதை உருவாக்கவும் ஓபிஎஸ் காரணமாக இருந்தார்.

ஓ.பி.எஸ் முயற்சியில் புதிய பாதை… இது எம்.ஜிஆர். போட்ட விதை!

பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானலுக்கு குறைந்த நேரத்தில் பயணம் செய்ய அடுக்கம் வழியாக சாலை அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கேட்டு வந்ததால், 1984ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சர்வே எடுத்து பாதை அமைக்க உத்தரவு போட்டார். ஆனால், பணிகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், 2006ல் தொகுதி மறுசீரமைப்பில் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் சேர்ந்துவிட்டதால், அடுக்கம் வழியாக பாதை அமைக்கும் முழுவதுமாக கிடப்பில் போடப்பட்டது. 2011ல் அப்போதைய முதல்வர் ஜெ.,விடம், பெரியகுளம் எம்.எல்.ஏவாக இருந்த ஓபிஎஸ், இந்த சாலை பணியினை மீண்டும் துவங்க வேண்டும் கோரிக்கை விடுத்தார். ஜெ.,வும் ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று, 21 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியதை அடுத்து பணிகள் நடந்த வந்த நிலையில், வனத்துறையின் தடையினால் மீண்டும் பணிகள் முடங்கின.

ஓ.பி.எஸ் முயற்சியில் புதிய பாதை… இது எம்.ஜிஆர். போட்ட விதை!

2014ம் ஆண்டுக்கு பின்னர் இப்பணிகள் மீண்டும் தொடங்கியது. அடுக்கம் கிராமம் வரைக்கும் பாதை அமைந்துவிட்டாலும் மேலும் சில கிலோமீட்டர் தூரம் பாதை அமைக்கப்பட வேண்டியிருந்தது.

இதனால் மக்கள், துணைமுதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற ஓபிஎஸ், பணிகளை துரிதப்படுத்தினார். தற்போது பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. இன்னும் சிறிது பணிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. அதுவும் முடிந்துவிட்டால் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்கிறார்கள் அதிகாரிகள்.