அமித்ஷா நெருக்கடி: டுவிட்டரில் இருந்து விலகிவிடுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

 

அமித்ஷா நெருக்கடி: டுவிட்டரில் இருந்து விலகிவிடுவதாக  பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அமித்ஷாவின் கணக்கும் அதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், அமித்ஷா போடும் கணக்கு மேற்கு வங்கத்தில்.

அம்மாநிலத்திற்கும் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது.

அமித்ஷா நெருக்கடி: டுவிட்டரில் இருந்து விலகிவிடுவதாக  பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

திமுகவுக்கு தேர்தல் வேலைகளை கவனித்து வரும் ஐபேக் பிரசாந்த் கிஷோர்தான் மேற்குவங்கத்தின் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் வேலைகளை கவனித்து வருகிறது.

கடந்த 2016 மே.வ. சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் வெறும் 6 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பாஜக, 2019 நாடாளுமன்ற தேர்தலில் 42 இடங்களில் 18 இடங்களை கைப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் மே.வ. ஆட்சியை கைப்பற்றிவிடும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது பாஜக. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி்யில் அதிருப்தியில் இருப்போரை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு வந்தது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமித்ஷா நெருக்கடி: டுவிட்டரில் இருந்து விலகிவிடுவதாக  பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா, அமித்ஷாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே நேரம், பாஜகவில் அதிருப்தியில் இருப்போரையும் தங்கள் பக்கம் இழுத்து வருகிறது திரிணாமுல் காங்கிரஸ். பாஜக எம்.பி. சௌமித்ராகானின் மனைவி சுஜாதா மொண்டல் திரிணாமுல் கட்சிக்கு தாவிவிட்டார். இதனால், சௌமித்ராகான் மனைவிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவதாக சொல்லி் இருக்கிறார்.

அமித்ஷா நெருக்கடி: டுவிட்டரில் இருந்து விலகிவிடுவதாக  பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

இந்த நிலையில், மேற்கு வங்கத்திற்கு விசிட் அடித்த அமித்ஷாவுக்கு இருந்த வரவேற்பை பார்த்துவிட்டு, மேற்கு வங்க மக்கள் ஊழல் நிறைந்த திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அழிக்க முடிவு எடுத்துவிட்டார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் 294 இடங்களில் பாஜக 200 இடங்களை பெறப்போவது உறுதி என்று தெரிவித்திருக்கிறார்.

அமித்ஷா நெருக்கடி: டுவிட்டரில் இருந்து விலகிவிடுவதாக  பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

அமித்ஷாவின் அதிரடிகளால் அப்செட்டில் இருக்கும் மம்தாவை திருப்திப்படுத்த, மம்தாவுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் ஐபேக் பிரசாந்த் கிஷோர், ’’மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எழுச்சி இருப்பது போல் அக்கட்சிக்கு ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை நிலை அதுவல்ல. சட்டமன்ற தேர்தலிலும், அக்கட்சி போராட வேண்டிய நிலைமைதான் இருக்கிறது. இரட்டை இலகத்தை பாஜகவால் தொட முடியாது’’என்று தெரிவித்திருக்கும் அவர், ‘’தயவு செய்து இந்த டுவிட்டர் பதிவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்… பாஜக மட்டும் இரட்டை இலத்தை தொட்டுவிட்டால் நான் இந்த டுவிட்டர் தளத்தை விட்டே வெளியேறிவிடுகிறேன்’’என்று சவால் விட்டிருக்கிறார்.