குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறீங்கள்ல.. அப்ப திருநீரு பூசத்தானே தேவர் சமாதிக்கு வந்திருக்கணும்? எச்.ராஜா

தமிழ்நாட்டில் அரசியலில் மதத்தை புகுத்தியதே திராவிட தீய சக்திகள்தான். விநாயகர் சிலையை உடைப்பீங்க, அடியே மீனாட்சி உனக்கெதுக்குடி வைர மூக்குத்தி கழட்டடின்னு சொல்லுவீங்க, அதற்கு எதிர்வினை ஆற்றினால் பிஜேபி மீது ஏன் தவறு சொல்கிறீர்கள்?

குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறீங்கள்ல.. அப்ப திருநீரு பூசத்தானே தேவர் சமாதிக்கு வந்திருக்கணும்?  எச்.ராஜா

பொதுவாக மதம் சாந்த விசயத்தைத்தான் பாஜக கையில் எடுக்கிறது என்கிற விமர்சனம் இருக்குதே? என்ற கேள்விக்கு முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இவ்வாறு எதிர்கேள்வியை எழுப்பினார்.

பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணலில் இவ்வாறு கேள்விய எழுப்பிய ராஜா, அதுகுறித்து மேலும் பேசியபோது,

குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறீங்கள்ல.. அப்ப திருநீரு பூசத்தானே தேவர் சமாதிக்கு வந்திருக்கணும்?  எச்.ராஜா

’’ஈவெரா பேசுதனத திமுக தி.கவை கண்டுக்கச்சொல்லுங்க. செய்வாங்களா? கருப்பர் கூட்டம் என்கிற கயவர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்தார்களே..அதற்கு திமுகவின் ஆதரவாளர் வக்கீலாக இருக்கிறாரே..கருப்பர் கூட்டத்தின் செயல்பாட்டுக்கு பின்னணியில் ஸ்டாலின் இருக்கிறார். மு.க.ஸ்டாலின் போல ரெட்டை வேஷம் போடுற ரெட்டை நாக்கு பாம்பு கிடையாது. ஒரு பக்கம் அவர் மனைவியை கோவிலுக்கு அனுப்பிவிட்டு இன்னொரு பக்கம் ஈவெராவை பற்றி பேசிக்கொண்டு இந்துக்களை இழுவு செய்பவர்களூக்கு ஆதரவு கொடுக்கிறது…அதுவும் பெரியவர் முத்துராமலிங்க தேவரை அவமானப்பத்தி இருக்கிறார். உங்கள யாரு அந்த சமாதிக்கு வரச்சொன்னது? யாராவது கூப்பிட்டாங்களா? வந்தீங்கள்ல.. நான் எந்த மதத்தையும் பின்பற்றமாட்டேன் முழுமையான நாத்திகன் என்றால் வரவேற்கிறேன். நண்பனாகவும் கருதுகிறேன். ரம்ஜானுக்கு மட்டும் குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறீங்கள்ல.. அப்ப திருநீரு பூசத்தானே தேவர் சமாதிக்கு வந்திருக்கணும்? எது எப்படி நீ திருநீரை கீழே போடுவ?

மத ரீதியிலான காயப்படுத்த வேண்டும் என்கிற இந்து விரோத திட்டமிட்ட செயல் இதைவிட வேறு எதுவும் இருக்க முடியாது. ஈவெரா சிலையின் மீது காவி பூசிவிட்டார் என்பதற்காக சின்னப்பையன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. ஆனால், அப்படி ஒரு சட்டம் இங்கே பாயதது ஏன்? கருப்ப கூட்டத்திற்கு சரியாக நடவடிக்கை எடுக்காததால்தான், அதை சுட்டிக்காட்ட வேண்டும் என்றுதான் வேல்யாத்திரை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ’’என்று தெரிவித்துள்ளார்.