’19 கால் விரல்கள்..12 கை விரல்கள்'” ..சூனியக்காரி என ஒதுக்கப்பட்ட மூதாட்டி கின்னஸில் இடம் !

 

’19 கால் விரல்கள்..12 கை விரல்கள்'” ..சூனியக்காரி என ஒதுக்கப்பட்ட மூதாட்டி கின்னஸில் இடம் !

இவர் பாலிடாக்டைலிசம் என்று சொல்லப்படும் ஒரு வகை நோயினால் தாக்கப்பட்டதால் இவருக்கு 19 காலில் 19 விரல்கள்  மற்றும் கையில் 12 விரல்கள் முளைத்துள்ளன.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் வசித்து வரும் மூதாட்டி குமாரி நாயக். இவருக்கு வயது 63. இவர் பாலிடாக்டைலிசம் என்று சொல்லப்படும் ஒரு வகை நோயினால் தாக்கப்பட்டதால் இவருக்கு 19 காலில் 19 விரல்கள்  மற்றும் கையில் 12 விரல்கள் முளைத்துள்ளன.

ttn

பொதுவாக ஒரு விரல் அதிகமாக இருந்தாலே வித்தியாசமாகப் பார்க்கும் இந்த சமூகம், 12 விரல் இருந்தா சும்மாவா விட்டு வைக்கும். அந்த ஊர் மக்கள் அனைவரும் இவரைச் சூனியக்காரி என்று கூறி ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த இந்த மூதாட்டி தன்னம்பிக்கை இழக்காமல் அந்த ஊரிலேயே வசித்து வந்துள்ளார். 

ttn

இந்நிலையில் குமாரி நாயக் மூதாட்டியை கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. அவரை நேரில் வந்து பார்த்த  கின்னஸ் அதிகாரிகள் அவருக்குத் தேவையான சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ttn

கின்னஸ் உத்தரவின் பேரில் அந்த மூதாட்டியை சூனியக்காரி என்று ஒதுக்கி வைத்த ஊர்மக்கள் இப்போது அவருக்குத் தேவையான உதவியைச் செய்து வருகின்றனர். முன்னதாக  4 கால் விரல்கள் மற்றும் 14 கை விரல்களுடன் குஜராத் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர சுதரின் கின்னஸ் சாதனையை இவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.