முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் …. சிலிர்க்கும் கமல்

முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் …. சிலிர்க்கும் கமல்

போரூர், பூந்தமல்லியில் நேற்று பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் இன்றைக்கு காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். காஞ்சி என்றாலே பட்டுதான் நினைவுக்கு வரும். பட்டு நெசவாளர்களை நேரில் சந்தித்தார் கமல்.

முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் …. சிலிர்க்கும் கமல்

பின்னர் அதுகுறித்து, காஞ்சிபுரம் நெசவாளர்கள் உலகைத் தங்கள் கலையால் ஈர்த்தவர்கள். ஜி.எஸ்.டி, கொரானா என அடுத்தடுத்து விழுந்த அடிகளால் அவர்கள் வாழ்வு நசிந்துவிட்டது. உரிய நிவாரணமும், தொழில் சிறக்க ஊக்கமும் உடனே அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

மேலும் காஞ்சியில் பொருளாதார புரட்சிக்கான 7 திட்டங்களை அறிவித்தார். அதுகுறித்து, தமிழகத்தின் பொருளியலைச் சீரமைத்து டிரில்லியன் எக்கனாமி எனும் இலக்கை நோக்கிய எமது செயல்திட்டத்தின் 7 முக்கியமான சிறப்பம்சங்களை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அறிவித்தேன் என்றும் தெரிவித்துள்ள கமல்,

முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் …. சிலிர்க்கும் கமல்

’’இதுவரை ஓட்டுக்களை “வாங்க” வந்த அரசியல்வாதிகளைத்தான் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் மக்கள். செல்லும் இடமெல்லாம் மாற்றத்தை விரும்பும் மக்கள் வெள்ளம் கரைபுரள்கிறது. நமது வாகனம் படகாகிறது’’ என்று தனது சீரமைப்போம் தமிழகத்தை பிரச்சாரம் அனுபவம் குறித்து சொல்லி சிலிர்க்கிறார் .