பாஜகவுக்கு தாவிய பாமகவினர்!

 

பாஜகவுக்கு தாவிய பாமகவினர்!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்று பாஜகவினர் பதில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் வடக்கு ஒன்றிய தலைவர் ஸ்ரீதர் தலைமையில் விவசாயிகளின் நண்பன் மோடி நிகழ்ச்சி நடைபெற்றது.

பாஜகவுக்கு தாவிய பாமகவினர்!

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நடிகை குட்டி பத்மினி, மக்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதால்தான் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று மாறி மாறி நடத்தி வருகிறார்.

விவசாயிகள் கொடி பிடிப்பதில்லை இதுபோன்ற இடைத்தரகர்கள்தான் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.