யாரு கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான்.. பகீர் கிளப்பிய ஷகிலா

 

யாரு கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான்.. பகீர் கிளப்பிய ஷகிலா

எனக்குக் குற்ற உணர்வில்லை; ஆனால், வேதனை இருக்கிறது என்று சுயசரிதை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஷகிலா. அந்த சுயசரிதை இப்போது ‘ஷகிலா’என்று திரைப்படமாகி இருக்கிறது.

இந்தி, மலையாளம், தமிழில் இப்படம் வரும் 25ம் தேதி ரிலீசாகிறது.

யாரு கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான்.. பகீர் கிளப்பிய ஷகிலா

சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் மலையாளத்தில் கொடி கட்டி பறந்தவர் ஷகிலா. 90களில் இவர் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் மம்முட்டி, மோகன்லால் படங்களையே வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிடுவார்கள். அதுவே இவருக்கு ஆபத்தாகி போனது. தங்களுக்கு மார்க்கெட் போய்விடுமென்றே திட்டமிட்டே ஷகிலா படங்களை காணாமல் செய்துவிட்டனர் மலையாள திரையுலகினர் சிலர். அதன்பின்னர் கவர்ச்சி வேடங்களை நிறுத்திக்கொண்டு, குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.

யாரு கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான்.. பகீர் கிளப்பிய ஷகிலா

தற்போது அவர் வாழ்க்கை வரலாற்று படம் திரைக்கு வருவதால் மீண்டும் ஷகிலா என்கிற ரீதியிலேயே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஷகிலா. அப்போது அவரிடம், இந்த படம் மூலம் என்ன சொல்ல வர்ரீங்க? என்று எழுப்பிய கேள்விக்கு, ‘’பெருசா ஒண்ணும் சொல்ல வரல.. நிறைய நடிகைகள் தற்கொலை செய்துகொள்ள ஏமாற்றம்தான் காரணமாக இருக்கிறது. நானும் நிறைய ஏமாற்றப்பட்டிருக்கிறேன். அதைத்தான் சுயசரிதையில் சொல்லி இருக்கிறேன். இப்போது சினிமாவகவும் ஆகியிருக்கிறது. புதிதாக வரும் நடிகைகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்’’என்றார்.

யாரு கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான்.. பகீர் கிளப்பிய ஷகிலா

நடிப்பதை குறைத்தூக் கொண்டுவீட்டீர்கள் போலிருக்கிறதே? என்ற கேள்விக்கு, ‘’கவுண்டமணியோட நடிச்சப்ப, வயசான நடிகரோட ஏன் நடிக்குறீங்கன்னு கேட்டாங்க. இப்ப சந்தானத்தோட நடிக்கும்போது, என்னப்பா பொம்பள கூட நடிக்கிற.. பொண்ணே கிடைக்கலயான்னு கேட்குறாங்க. அப்புறம் எப்படி நான் நடிக்கிறது?’’என்கிறார்.

யாரு கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான்.. பகீர் கிளப்பிய ஷகிலா

அரசியில் பிரவேசத்தில் ஆர்வம் இருக்குதா? என்ற கேள்விக்கு, ‘’கூப்பிட்டா போக வேண்டியதுதான்’’என்றார்.

எந்த கட்சியில் சேர விருப்பம்? என்ற கேள்விக்கு, ‘’யாரு கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான். இதுல என்ன ஆலோசனை’’ என்றவரிடம்,

ரஜினி கட்சிக்கு பிரச்சாரம் செய்வீங்களா? என்றதும், ‘’ரஜினி கூப்பிட்டாலும் போய் பிரச்சாரம் செய்வேன்’’ என்றார்.