மாஜியை கதற விட்ட முதல்வர்!

 

மாஜியை கதற விட்ட முதல்வர்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி அன்று நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட பொறுப்பாளர்களை தனித்தனியே அழைத்து பேசியிருக்கிறார் முதல்வர்.

மாஜியை கதற விட்ட முதல்வர்!

மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்து பேசியபோது, புலம்பித்தள்ளி இருக்கிறார் மனுசர். ‘’பேருக்குத்தான் நான் பொறுப்பாளர். ஆனா, அதிகாரம் எல்லாம் ராஜேந்திரபாலாஜி கிட்டதான் இருக்குது. என்னை மதிக்கிறது கிடையாது. என்கிட்ட எந்த ஆலோசனையும் வச்சிக்கிறது இல்ல. நான் சொன்னாலும் அவரு கேட்குறது இல்ல. இப்படியே போய்க்கிட்டிருந்தா விருதுநகர் மாவட்டத்துல கஷ்டம்தான்’’என்று சொல்லி இருக்கிறார்.

‘’அப்படீன்னா, உங்கள தூத்துக்குடி மாவட்டத்துகு பொறுப்பாளராக போட்டுடலாம்..’’னு சொல்லி இருக்கிறார் முதல்வர்.

மாஜியை கதற விட்ட முதல்வர்!

அதுக்கு நத்தம், ‘’அவரை கண்டிச்சு வச்சா போதும். சரியாயிடும். என்னை மாத்துறதுனால எல்லாம் சரியாகாது. மக்களுக்கு சந்தேகம்தான் வரும். நான் தப்பானவன் மாதிரி ஆகிவிடும்’’என்று சொல்ல,

‘’கண்டிக்கிற நேரமாண்ணே இது. எலெக்சன் நேரத்துல ஓடிக்கிட்டு இருக்குறோம்…’’என்று சொல்ல,

மீண்டும் நத்தம் அதே பாட்டை பாட, சரி,சரி, பார்க்கலாம் என்று அலட்சியமாக சொல்லி இருக்கிறார் முதல்வர்.

மாஜியை கதற விட்ட முதல்வர்!

இதனால் மனம் நொந்த நத்தம், ஒருத்தர் தப்பான ரூட்டுல போறாருன்னு சொன்னா, என்னையே தப்பான ஆளா மாத்த பார்க்கிறாரே.. என்று ஆதரவாளர்களிடம் கதறாத குறையாக புலம்பித் தள்ளி வருகிறாராம்.

ஜெ.,வின் நால்வர் அணியில் இருந்த காலமாண்ணே இது. இப்போ, கே.டி.ஆருக்கு செல்வாக்கு அப்படி. புரிஞ்சுக்கோங்கண்ணே என்று நத்தத்தை தேற்றி வருகிறார்களாம் ஆதரவாளர்கள்.