தும்பை விட்டு வாலை பிடிப்பது ஏன்?

 

தும்பை விட்டு வாலை பிடிப்பது ஏன்?

தடையை மீறி திட்டமிட்டபடி திமுக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 23 நாளாக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக கூட்டணி இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

தும்பை விட்டு வாலை பிடிப்பது ஏன்?

தொற்று நோய் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை 1897ல் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் 144 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதை தடை செய்யும் உத்தரவு கடந்த மே மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வரும் 144 தடை உத்தரவு இம்மாதம் 31ம் தேதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளது காவல்துறை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்துவது என்று திமுக முடிவெடுத்துள்ளது.

தும்பை விட்டு வாலை பிடிப்பது ஏன்?

இன்று காலை 8.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் திட்டமிட்டவாறு திமுக கூட்டணியின் சார்பில் உண்ணாநிலை அறப்போர் நடக்கும். விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் விசிக பங்கேற்கிறது திருமாவளவன் அறிவித்திருக்கிறார்.

ஐந்து நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்றால், நேற்று இரவு வள்ளுவர் கோட்டத்தில் 100 பேருக்கு மேல் கூடி நின்று உண்ணாவிரத போராட்டத்திற்கான பந்தல் அமைத்துக்கொண்டிருந்தார்கள்.

தும்பை விட்டு வாலை பிடிப்பது ஏன்?

போராட்டத்திற்கு தடை என்றால் பந்தல் அமைக்கும் போதே தடுத்திருக்கலாம். போராட்டம் நடத்தவிட்டும் வேடிக்கை பார்த்துவிட்டு அப்புறமாக கைது செய்து பேருந்தில் ஏற்றிக்கொண்டு போய் மண்டபத்தில் தங்கவைத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டுமா என்ன? இதற்கு பேருதான் 144 தடையா? போராட்டம் நடத்தவிட்டு வேடிக்கை என்று என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்.

ஒன்று அனுமதி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் முழுவதுமாக தடுத்துவிட்ட வேண்டும். இது தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக அல்லவா இருக்கிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.