“குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன்” : மு.க.ஸ்டாலின்

“குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன்” : மு.க.ஸ்டாலின்

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று 18,70,000 பேர் இணைந்திருக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன்” : மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி கூட்டம் நடந்து வருகிறது.

“குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன்” : மு.க.ஸ்டாலின்

அப்போது மக்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின், “கிராம சபை கூட்டத்தை பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூக்கமிழந்து தவிக்கிறார். திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்களை 2 கோடி பேர் கவனித்து வருகின்றனர். அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று 18,70,000 பேர் இணைந்திருக்கிறார்கள். நான் குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன். பிரதமர் மோடியால் கூட மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க முடியாது” என்றார்.

“குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன்” : மு.க.ஸ்டாலின்

முன்னதாக கிராம சபை கூட்டம் கிராம தலைவரால் நடத்தப்பட வேண்டும். அதற்கு சட்டவிதிமுறைகள் உள்ளது. இதை அரசியல் கட்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு தடை விதித்ததால் கிராம சபை கூட்டத்தை மக்கள் கிராமசபை என்ற பெயரில் ஸ்டாலின் நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.