கூகுள் நிறுவனத்தின் செயலிகள் அனைத்தும் முடங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜி.மெயில், யூ டியூப், கூகுள் டாக்ஸ், பிளேஸ்டோர் உள்ளிட்ட செயலிகள் முடங்கியதால் பயனர்கள் அவதியாகி உள்ளனர்.
ஜி.மெயில் மற்றும் யூ டியூப் செயலிகளை நம்பி கோடிக்கணக்கானோர் உள்ளதால் அவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
சர்வர் கோளாறு காரணமாக முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கோளாறினை சரி செய்யும் பணி தீவிரமாக இருக்கிறது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அதிகபட்சமாக அரைமணி நேரத்தில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்று கூகுல் தெரிவித்திருக்கிறது.
கூகுள் செயலிகளின் இயக்கம் ஒரு மணி நேரம் இல்லாமல் போனாலும் உலகமே ஸ்தம்பிக்கிறது பரபரப்புதான்.