நாளை தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க பாமக முடிவு!

 

நாளை தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க பாமக முடிவு!

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் திமுக தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. மக்கள் நீதி மய்யமும் பிரச்சாரத்தினை தொடங்கி இருக்கிறது. தேமுதிகவும் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் பாமக போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.

நாளை தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க பாமக முடிவு!

கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது பாமக. சென்னையில் டிசம்பர் 4ம் தேதிடிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தின் போது வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பாமகவினர் சாலைமறியல், ரயில் மீது கல்வீச்சு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அந்த வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாளை தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க பாமக முடிவு!

இந்நிலையில், நாளை அரசு வேலையில் 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி, நாளை 14.12.2020 திங்கட்கிழமை தமிழகத்தில் உள்ள 12,622 கிராம நிர்வாக அலுவலகங்களிலும் “கிராமப் பொதுமக்கள் மனு கொடுக்கும் மாபெரும் மக்கள் திரள் அறவழிப் போராட்ட நிகழ்வு” எனும் போராட்டத்தினை நடத்த இருக்கிறது பாமக.

கிராமத் திருவிழாபோல மனு கொடுக்கப்படும் என்று பாமக தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து விஏஓ அலுவலகங்களிலும் மனு கொடுக்கும் போராட்டத்தின் மூலமாக தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்து திரும்பி பார்க்க வேண்டும் என்று பாமக முடிவெடுத்திருப்பதாக பரபரப்பான பேச்சு எழுந்திருக்கிறது.