உடலில் டீசலை ஊற்றிக்கொண்ட ரசிகர்! பதறியடித்து ஓடிவந்த ரஜினி!

 

உடலில் டீசலை ஊற்றிக்கொண்ட ரசிகர்! பதறியடித்து ஓடிவந்த ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் நாளை 12.12.2020 அன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வரும் 31ம்தேதி அவர் கட்சி அறிவிப்பை வெளியிடும் நிலையில் நாளை அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரது மன்றத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையைச்சேர்ந்த ரஜினி ரசிகர் ’ரஜினி’பாண்டியின் வீடியோ ஒன்று வலைத்தளங்களில் வைரலாகிறது.

அந்த வீடியோவில் பேசும் பாண்டி, ’’என் பேரு பாண்டி. ரஜினிபாண்டின்னு சொன்னாதான் மதுரையில எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு நான் ரஜினி மேல வெறியா இருப்பேன்.

உடலில் டீசலை ஊற்றிக்கொண்ட ரசிகர்! பதறியடித்து ஓடிவந்த ரஜினி!

மாவீரன் படம் பார்த்ததுக்காக என் கையில சூடு போட்டுட்டாங்க. இனிமே படம் பார்க்க போவியான்னு கேட்டதுக்கு, ரஜினி படத்துல பேசுறதுமாதிரியே, மனுசனுக்குத்தான் வலிக்கும், மாவீரனுக்கு வலிக்காதுன்னு சொன்னேன். உடனே, உடம்பு முழுசும் சூடு போட்டாங்க வீட்டுல. ( சட்டையை கழற்றி தழும்புகளை காட்டுகிறார்) அப்பவும் நான் அசரல. அதுக்கு மேல என்னை விட்டுட்டாங்க.

அவரு பேர நெஞ்சுல பச்சை குத்தியிருக்கேன். ஒருமுறை குத்தினது சரியா இல்லைன்னு. ரத்தம் வந்தாலும் பரவாயில்லைன்னு வலியை எல்லாம் பொறுத்துக்கிட்டு மூனு முறை பச்சை குத்தினேன்.( சட்டையை கழற்றி பச்சை குத்தியிருந்ததை காட்டுகிறார்)

ரொம்ப வருசமாவே நான் நானா இருந்ததில்ல. ரஜினி மாதிரியே நடப்பேன். யாரும் என்னை கூப்பிட்டா கூட, ரஜினி மாதிரிதான் திரும்புவேன். அந்த அளவுக்கு அவருமேல வெறியனா இருந்தேன்.

ஒரு பிறந்தநாளுக்கு நான் அவரு வீட்டுக்கு போயிட்டேன். என்னை ரஜினியை பார்க்க விடல. எனக்கு சென்னையில யாரையும் தெரியாது. எனக்கு தெரிஞ்ச ஒரே ஆளு ரஜினிதான். அவர பார்க்காம நான் போகமாட்டேன்னு அங்கயே உட்கார்ந்துட்டேன்.

காலையில இருந்து டீத்தண்ணி கூட சாப்பிடல. சாப்பாடு எதுவும் சாப்பிடாம பசியோட அங்கயே உட்கார்ந்துட்டேன்.

செக்யூரிட்டி என்னை கடைசிவரைக்கும் உள்ளே விடல.

நான் ரஜினியை பார்க்கணும். இல்லேன்னா இங்கயே தீக்குளிச்சுடுவேன்னு சொன்னேன். அப்பவும் அவர், அதெல்லாம் அவர பார்க்க முடியாது. நீ மதுரைக்கே திரும்பி போன்னு சொல்லிட்டார்.

உடலில் டீசலை ஊற்றிக்கொண்ட ரசிகர்! பதறியடித்து ஓடிவந்த ரஜினி!

நானும் ஒரு முடிவோடுதானே போயிருந்தேன். டீசல் கேனை எடுத்து செக்யூரிட்டி முன்னாடியே என் உடல் முழுசும் ஊத்திக்கிட்டேன். அதுலயே செக்யூரிட்டி பதறிட்டார். அதுக்கு அப்புறம் வாசலில் போய் நின்னு, ரஜினியை பார்க்க முடியலைன்னா இப்பவே என்னை கொளுத்திக்குவேன்னு சொன்னதும், இரு.. இரு நான் உள்ள போய் சொல்லுறேன்னு ஓடினார்.

கொஞ்ச நேரத்துல ரஜினி பதறியடுச்சு ஓடிவந்தார். ரஜினியை பார்த்ததும் எனக்கு பசி, கவலை எல்லாம் பறந்து போச்சு. அவர நேருல பார்த்ததும் பேச்சே வரல. அவரு மட்டும் அன்னைக்கு வராம இருந்திருந்தா சத்தியமா சொல்லுறேன் செத்திருப்பேன்.

இன்னைக்கு மதுரையில ரஜினி பாண்டின்னு ஒருத்தன் இருந்திருக்கமாட்டான். அந்த அளவுக்கு நான் ரஜினி வெறியனா இருந்தேன். ரஜினிதான் உலகம்னு இருந்தேன்’’ என்கிறார்.