சசிகலாவுக்கும் ஒரு நாற்காலி… துண்டு போட்ட ஓ.பி.எஸ்!

 

சசிகலாவுக்கும் ஒரு நாற்காலி… துண்டு போட்ட ஓ.பி.எஸ்!

அதிமுகவில் அடுத்தடுத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார் ஓ.பி.எஸ்.

ரஜினி கட்சி தொடங்குவது பற்றிய கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், மற்ற அமைச்சர்களும், அவர் கட்சி தொடங்கட்டும் அப்புறம் அதுபற்றி சொல்கிறோம் என்று சொல்லி வரும் நிலையில், ரஜினி கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன். வாய்ப்பிருந்தால் ரஜினியிடம் கூட்டணி அமையலாம் என்று என்று சொல்லி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தினார் துணைமுதல்வர் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் சொன்னதில் உடன்பாடு இல்லை என்றாலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அவர் கருத்தினையும் ஏற்கிறோம் என்று அதிமுகவினர் சொல்லி வருகிறார்கள்.

சசிகலாவுக்கும் ஒரு நாற்காலி… துண்டு போட்ட ஓ.பி.எஸ்!

சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்., அந்த சசிகலாவுக்காக நாற்காலி பிடிக்க முயன்று அடுத்த சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஒரு பக்கம் தர்மயுத்தம் நடத்திக்கொண்டே மறுபக்கம் தினகரனை ரகசியமாக ஓபிஎஸ் சந்தித்து டீல் பேசியது எல்லாம், எடப்பாடியாருடன் சேர்ந்தபோது அம்பலமானது. எடப்பாடியாரே முதல்வர் வேட்பாளர் என்று ஆகிவிட்டதால், சசிகலா பக்கமே மொத்தமாக சாய்ந்திருக்கிறாராம் ஒபிஎஸ்.

சசிகலாவும் சிறையில் இருந்து வந்ததும், அதிமுகவிலும் ஆட்சியிலும் நாற்காலி போட்டுவிட துடிக்கிறாராம்.

இந்நிலையில், சென்னையில் நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கில் பங்கேற்ற ஓபிஎஸ், ’’ஒரு ஆட்சியின் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தின் ஆணுக்கும் பெண்ணுக்கு சம பங்கு வேண்டும். முதல் இரண்டரை ஆண்டுகள் ஆணுக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் பெண்ணுக்கும் வழங்கினால்தான் ஆணுக்கு பெண் சமம் என்கிற நிலை அனைத்து மட்டங்களிலும் உருவாகும்’’என்று பேசியது, சசிகலாவுக்கு ஒரு நாற்காலி வேண்டும் என்று ஓபிஎஸ் துண்டுபோடுகிறார் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.