அதிகாரிகளின் நெருக்கடி… கையை பிசைந்து நிற்கும் முதல்வர்!

 

அதிகாரிகளின் நெருக்கடி… கையை பிசைந்து நிற்கும் முதல்வர்!

இருபது சதவிகித இடஒதுக்கீடு போராட்டத்தில் பாமகவினர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், அதற்கான ஆதாரங்களும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட 856 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது போலீஸ். ஆனால் இன்று வரையிலும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

அதிகாரிகளின் நெருக்கடி… கையை பிசைந்து நிற்கும் முதல்வர்!

இந்நிலையில், பாமகவின் வன்முறையாட்டம் குறித்தும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது குறித்தும் வராகி என்பவர் ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை வருகிறது.

விசாரணையின்போது, வழக்கு பதிவு செய்தும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை நீதிமன்றம் கேள்வி எழுப்பினால் தமிழக அரசு சார்பில் என்ன சொல்வது? அதனால், அன்புமணி உள்ளிட்டவர்களை கைது செய்துவிடலாம் என்று அதிகாரிகள் முதல்வருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம். ஆனால், கூட்டணியை மனதில் கொண்டு முதல்வர் கையை பிசைந்து நிற்கிறாராம்.