என் கடை! என் உரிமை! பந்த் வேண்டாம் போடா!

 

என் கடை! என் உரிமை! பந்த் வேண்டாம் போடா!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லில் கடந்த 12 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக AIKSCC எனும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டத்தை நடத்தி வருகிறது.

என் கடை! என் உரிமை! பந்த் வேண்டாம் போடா!

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் தமிழகமெங்கிலும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் அங்கு முழு அடைப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் பாரத் பந்த் என்ற ஹேஷ்டேக் கடந்த சில தினங்களாக டுவிட்டரில் டிரெண்டாகி வந்தது. பாரத் பந்து நடைபெற்று வரும் இன்று பந்த் வேண்டாம் போடா என்ற ஹேஷ்டேக்கினை பாஜகவினர் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும், கடையை திறப்போம் போடா, என் கடை என் உரிமை பந்த் வேண்டாம் போடா என்ற ஹேஷ்டேக்குகளையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.