போதையில் போலீசாரை எட்டிஉதைத்த காம்னி, பத்மா சுப்பிரமணியத்தின் தம்பி மகளா?

 

போதையில் போலீசாரை எட்டிஉதைத்த காம்னி, பத்மா சுப்பிரமணியத்தின் தம்பி மகளா?

போதையில் காரை வேகமாக ஓட்டிவந்தோடு அல்லாமல், அதைதட்டிக்கேட்ட போலீசாரை எட்டி உதைத்து, நான் யாரு தெரியுமா? என் அப்பா யாரு தெரியுமா? என்று நடுரோட்டில் ரகளை செய்த சினிமா உதவி டைரக்டர் காம்னியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொண்டாட்டங்களுக்கான அத்தனை விசயங்களும் கிழக்கு கடற்கரை சாலையில் இருப்பதால், கார்களும், பைக்குகள் இந்த சாலையில் சீறிப்பாய்வது வழக்கம். அதைக்கட்டுப்படுத்த திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து போலீசார் அதிகளவில் இருப்பதும் வழக்கம்.

போதையில் போலீசாரை எட்டிஉதைத்த காம்னி, பத்மா சுப்பிரமணியத்தின் தம்பி மகளா?

அப்படித்தான் திருவான்மியூர் தெற்கு அவென்யூ சாலையில் நேற்று முன் தினம் இரவு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரை ஓட்டி வந்தவர் இளைஞர் போதையில் இருந்தது சோதனையில் தெரியவந்தது. அவரின் காரைவிட்டு இறங்கச்சொன்னதும் இறங்கிவிட்டார். உடன அந்த இளைஞருடன் வந்த இளம்பெண், காரை விட்டு இறங்கி நான் யார் தெரியுமா? நான் மீடியாவுல இருக்குறேன். என் அப்பா யார் தெரியுமா? என்று எகிறினார்.

போதையில் வாகனத்தை ஓட்டி வந்தது குறித்து விசாரித்த போலீசாரை காலால் எட்டி உதைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

போதையில் போலீசாரை எட்டிஉதைத்த காம்னி, பத்மா சுப்பிரமணியத்தின் தம்பி மகளா?

பின்னர் அவரின் காரை கைப்பற்றிய போலீசார் காலையில் பெற்றோருடன் வந்து காரை வாங்கிச்செல்லும்படி கூறிவிட்டனர் போலீசார். நேற்று காலையில் தனது தாயாருடன் திருவான்மியூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தார் அப்பெண். விசாரணையில் அவர் அடையாறு இந்திராநகரைசேர்ந்த காம்னி(21) என்றும், சினிமா உதவி டைரக்டர் என்றும் தெரியவந்தது. காம்னியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

பிரபல பரத நாட்டியக்கலைஞர் பத்மாசுப்பிரமணியத்தின் தம்பி மகள்தான் காமினி என்று வலைத்தளங்களில் செய்தி உலவுகின்றன.