ஜெயலலிதா கொள்ளைக்காரி என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதா? ஜெ. வக்கீல் ஜோதி ஆதாரத்துடன் விளக்கம்

 

ஜெயலலிதா கொள்ளைக்காரி என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதா? ஜெ. வக்கீல் ஜோதி ஆதாரத்துடன் விளக்கம்

அரசியல் சட்டத்தை கொலைசெய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி என்று ஜெயலலிதா பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் கூறியது பொய் என்றும், ஆதாரமற்றது என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் புத்தகத்தை ஆதாரமாக காட்டி சொன்னார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி.

2ஜி ஊழல் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதால், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக என்று பேசியதால், அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ராசா, கொதித்தெழுந்து, திமுக ஊழல் பண்ணல உங்க ஆத்தாதான் ஊழல் பண்ணி ஜெயிலுக்கு போச்சு.

ஜெயலலிதா கொள்ளைக்காரி என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதா? ஜெ. வக்கீல் ஜோதி ஆதாரத்துடன் விளக்கம்

அரசியல் சட்டத்தை படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. கொள்ளையடிக்கணும் என்பதற்காகவே சசிகலா, திவாகரன், இளவரசியை தன் வீட்டுக்கு அழைத்துவந்து, புதிய புதிய போலி செல்போன் கம்பெனிகளை உருவாக்கி, அந்த கம்பெனிகளின் வாயிலாக பல நூறு கோடி ரூபாயை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் அவர் இருந்தது அசிங்கம்.. அப்படி நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது என்று சொன்னார் ராசா. இது சம்பந்தமாக கோட்டையில் தன்னுடன் விவாதிக்க தயாரா? என்று சொடக்கு கூப்பிட்டார் முதல்வரை.

முதல்வரை ஒருமையில் பேசி, சொடக்கு போட்டு கூப்பிட்ட ராசாவை கடுமையாக கண்டித்தார் ஜோதி. 10 ஆண்டுகள் மத்திய அமைச்சர் செய்கின்ற காரியமா இது என்று கேட்டார். ராசா என்னுடன் விவாதிக்க தயாரா? நான் சொடக்கு போட்டு அழக்கவில்லை. அன்பாக அழைக்கின்றேன். அறிவாலயத்திற்கே வரத்தயார். தனியாகவே வருகிறேன் என்றார் ஜோதி.

மேலும் ராசாவின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் செய்தியாளர்களிடையே விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதா கொள்ளைக்காரி என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதா? ஜெ. வக்கீல் ஜோதி ஆதாரத்துடன் விளக்கம்

’’மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறா ராசா. இந்திய அரசியலைமைப்பு சட்டத்தை மிகவும் குற்றுயிரும் கொலையுதிருமாக செய்த முதலமைச்சர் என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதாக சொல்லி இருக்கிறார்.

திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு கூற முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ அருகதை கிடையாது என்கிறார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் ஜெயலலிதா கொள்ளைக்காரி என்று இருப்பதாக சொல்லும் ராசா, இதைப்பற்றி விவாதிக்க தயாரா என்று சொடக்கு போட்டு சொல்கிறார். இதைப்பற்றி விவாதிக்க நான் தயாராக வருகிறேன். நீங்கள் வேண்டுமானால் அட்டர்னி ஜெனரலை வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.

அட்டர்னி ஜெனரல் என்பவர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர். அவருக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமில்லை. அட்வகேட் ஜெனரல்தான் தமிழகத்திற்கு சம்பந்தப்பட்டவர்.மத்திய அமைச்சராக இருந்தும் ராசாவுக்கு இது கூட தெரியவில்லை.

ஜெயலலிதா கொள்ளைக்காரி என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதா? ஜெ. வக்கீல் ஜோதி ஆதாரத்துடன் விளக்கம்

ஜெயலலிதாவின் 11 வழக்குகளில் நான் ஆஜராகி வெற்றி பெற்றேன். சில சதிச்செயல்களால் 12 வது வழக்கான இந்த வழக்கில் வெளியேற்றப் பட்டேன்.நான் வெளியே வந்துவிட்டாலும், நான் நடத்திவிட்டு வந்த வழக்கு. அதனால் அந்த வழக்கின் தன்மை எனக்குதெரியும். அதனால் ஆ.ராசா சொல்லும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க முன்வந்திருக்கிறேன்.

கீழமை நீதிமன்றம் பெங்களூரு கோர்ட்டில் தண்டனைவந்தது. அதற்கு மேல் அப்பீல் செய்தார்கள். அதில் பெங்களூரு நீதிமன்றத்தில் விடுதலை ஆனார்கள். அந்த விடுதலையை எதிர்த்து காலதாதமத்தோடுதான் அப்போதிருந்த காங்கிரஸ் ஆட்சியின் ஒப்புதலோடு திமுக சூழ்ச்சியாக அப்பீல் செய்தது. அந்த அப்பீல் நடந்துகொண்டிருந்த காலத்தில் ஜெயலலிதா இறந்துவிட்டார்.

5.12.2016 அன்று ஜெயலலிதா உயிரிழந்தார். ஆனால், ஜெயலலிதா இறந்து 80 நாட்கள் கழித்து 14.2.2017ல்தான் தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பின் புத்தகம் என்னிடம் இருக்கிறது. இதில் எந்த இடத்தில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவை கொள்ளைக்காரி என்று சொல்லி இருக்கிறது. அரசியலைமைப்பு சட்டத்தை கொலை செய்தவர். அக்கிரமம் செய்தவர் என்று எங்கேனும் எழுதி இருக்குதா என்று ராசா சொல்லுவாரா?

ஜெயலலிதா கொள்ளைக்காரி என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதா? ஜெ. வக்கீல் ஜோதி ஆதாரத்துடன் விளக்கம்

இந்த புத்தகத்தை கூட தருகிறேன். தானும் ஒரு வழக்கறிஞர் என்று ராசா சொல்கிறார். அதனால் அவர் படித்துபார்த்து தெரிந்துகொள்ளட்டும்.

அந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். எப்படி விடுதலை ஆனார் என்கிற வியாக்கியானம் எல்லாம் தேவையில்லை.

விடுதலையாகி அப்பீல் தீர்ப்பு வருவதற்கு முன்னால் இறந்துவிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் சட்ட நிலைமை என்ன? இறந்து போன நபர் மீது ஒரு வழக்கு தொடர்ந்து நடக்கலாமா? நடக்கக்கூடாது? என்பதுதான் கேள்வி.

இறந்து போன நபர் மீது வழக்கு நடக்கக்கூடாது என்பதுதான் சட்ட நிலைமை. விடுதலை ஆகிவிட்டார் என்ற சூழலில்தான் ஜெயலலிதா இறந்தார். ஆனால், அப்பீல் தீர்ப்பு 80 நாளைக்கு பின்னர்தான் வருகிறது.

இறந்து போனவர் பற்றி தீர்ப்பில் சொல்லக்கூடாது என்கிறபோது, ஜெயலலிதா கொள்ளைக்காரி என்று சுப்ரீம் கோர்ட் எப்படி சொல்லும்? 394 சட்ட பிரிவின் படி தீர்பில் ஜெயலலிதா பற்றி எதுவும் சொல்லவில்லை. ஜெயலலிதா என்ற பெயர் மட்டும் தீர்ப்பில் வருகிறது.’’ என்று விளக்கம் கொடுத்தார்.