இளைஞர்தான் முதல்வர் வேட்பாளர்! ரஜினியின் அதிரடி முடிவு!

 

இளைஞர்தான் முதல்வர் வேட்பாளர்! ரஜினியின் அதிரடி முடிவு!

அரசியல் கட்சி தொடங்கினாலும் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் சொல்லி இருந்தார். சொன்னதை செய்துகாட்டும் ரஜினிகாந்த் தான் சொன்னது மாதிரியே 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று சொல்லி இருந்தார். அதுபோலவே சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சி தொடங்கும் நடவடிக்கை இறங்கி இருக்கிறார்.

இதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் என்று இருவரை நியமித்திருக்கிறார்.

இளைஞர்தான் முதல்வர் வேட்பாளர்! ரஜினியின் அதிரடி முடிவு!

இதில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், ’’முதல்வர் வேட்பாளர் தான் இல்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார். தனது கட்சியில் இளைஞர் ஒருவர்தான் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படுவார் என்று ரஜினி தெரிவித்திருக்கிறார். ரஜினி அப்படி ஒரு முடிவில் இருந்தாலும் அவர் முதல்வர் வேட்பாளராக வரவேண்டும் என்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்’’ என்றும் சொல்லி இருக்கிறார்.

சொன்னதை செய்து காட்டுபவர் ரஜினிகாந்த். 2017ல் அவர் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னதைத்தான் இப்போது உறுதிபடுத்தி இருக்கிறார். அவர் வார்த்தை தவறாத மனிதர். அதைத்தான் நிரூபித்திருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார் தமிழருவின் மணியன்.

இளைஞர்தான் முதல்வர் வேட்பாளர்! ரஜினியின் அதிரடி முடிவு!

அப்படி என்றால், தான் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதையும், இளைஞர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதையும் செய்துகாட்டி சொன்னதை செய்து காட்டுபவர் என்பதை நீருபிக்கப்போகிறாரா ரஜினி என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

முதல்வர் வேட்பாளராக ரஜினி முன் நிறுத்தப்போகும் அந்த இளைஞர் யார் என்றும் பரபரப்பு எழுந்திருக்கிறது.