1800 ஆண்டு பழமையான கண்ணகி கோவில் திருவிழா! வருகிற சித்திரை 19-ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது

 

1800 ஆண்டு பழமையான கண்ணகி கோவில் திருவிழா! வருகிற சித்திரை 19-ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி நாள் அன்று மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி நாள் அன்று மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன் மூன்று நாள்கள் வரை விழா நடத்த அனுமதித்த கேரளா அரசு,விழாவை நடத்த முழுமையாகவே தடை விதிக்கும் முடிவில் இருந்த நிலையில்,மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு இந்த ஒருநாள் விழாவிற்கு அனுமதி கொடுத்திருக்கிறது!
 
அதற்கான விழா வருகிற 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
 

poovurnami

இந்த கோவில்,தேனி மாவட்டம் கம்பத்தை  அடுத்துள்ள கூடலூருக்கு தெற்கே உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் இருக்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 4380 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இக்கோவில் 1800 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டு,குலசேகர பாண்டியன், ராஜ ராஜ சோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. 

poovurnami

 
இக்கோவில் விழாவானது மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அதே நாளில் நடைபெறும்.விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் இரண்டுவிதமான வழிகளில் இந்தக் கோவிலுக்கு போகலாம்.

poovurnami

 
இயற்கை சூழ்ந்த மலைப்பகுதி வழியாக நடந்து போக விருப்படுபவர்கள் கூடலூரிலிருந்து லோயர் கேம்ப் போகும் வழியில் பளியன்குடி சென்று,அங்கிருந்து உயர்ந்த வனத்தின் வழியாக 6.6 கி.மீ. நடை பயணமாக செல்லலாம்.

poovurnami

 
வாகனத்தில் செல்ல விரும்புபவர்கள் கம்பத்திலிருந்து  குமுளிக்கு பஸ் மூலம் வந்து அங்கிருந்து வாடகை ஜீப்பில் கண்ணகி கோவில் வரை போகலாம். நுழைவு நேரம் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே.பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.குடி தண்ணீர் பாட்டில் கொண்டு போவதாக இருந்தால் ஐந்து லிட்டர் பாட்டிலை மட்டுமே கொண்டு போக அனுமதிப்பதாக அறிவித்திருக்கிறது கேரளா அரசு.

இதையும் படிங்க: தொடங்கியது திருநங்கையர் திருவிழா! கூத்தாண்டவர் கோவில் வரலாறு தெரியுமா?