10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த 18 நாடுகள் இவைதாம்! – #Corona

 

10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த 18 நாடுகள் இவைதாம்! – #Corona

கொரோனா வைரஸ் பரவல் உலகையே உலுக்கி வருகிறது. சில நாடுகளில் புதிய வகை வைரஸ் பரவி வருவது இன்னும் அதிர்ச்சியை அளிக்கிறது.

உலகளவில் கொரோனா மொத்த பாதிப்பு 8 கோடியே 69 லட்சத்தைக் கடந்து விட்டது. இவர்களில் 6 கோடியே 16 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 18.7 லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டனர்.

10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த 18 நாடுகள் இவைதாம்! – #Corona

பத்து லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளை 18 நாடுகள் கடந்துவிட்டன. அவை எந்தெந்த நாடுகள் என்பதைப் பார்ப்போம்.

முதலிடத்தில் அமெரிக்கா. தொடக்கம் முதலே அமெரிக்காவில் பாதிப்பு அதிகம். தற்போதைய நிலையில் அமெரிக்காவில் 2,15,79,641 பேர் பாதிக்கப்பட்டு, 3,65,664 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இரண்டாம் இடம் இந்தியா. நமது நாட்டிலும் கடந்த மார்ச் முதல் பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. 1,03,75,478 பேர் பாதிக்கப்பட்டு 1,50,151 பேர் இறந்துவிட்டனர்.

10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த 18 நாடுகள் இவைதாம்! – #Corona

மூன்றாம் இடத்தில் பிரேசில். அங்கு 78,12,007 பேர் பாதிக்கப்பட்டு, 1,97,777 பேர் மரணம் அடைந்துள்ளனர். நான்காம் இடத்தில் ரஷ்யா. இங்கு 33,08,601 பேர் பாதிக்கப்பட்டு 59,951 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து. இங்கு 27,74,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாம் இடத்தில் உள்ள பிரான்ஸில் பாதிப்பு 26,80,239 பேர். ஏழாம் இடத்தில் துருக்கி. அங்கு பாதிப்பு 22,70,101 பேர்.

எட்டாம் இடத்தில் உள்ள இத்தாலியில் பாதிப்பு 21 லட்சத்தைக் கடந்து விட்டது. ஒன்பதாம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் 19 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதித்துள்ளனர்.

பத்தாம் இடத்தில் ஜெர்மனி. இங்கு பாதிப்பின் எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்துவிட்டது. 11-ம் இடத்தில் உள்ள கொல்மபியாவில் 17,02,966 பேர். 12-ம் இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவில் 16,62,730 பேர் பாதிக்கப்படுள்ளனர்.

10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த 18 நாடுகள் இவைதாம்! – #Corona

13-ம் இடத்தில் உள்ள இடத்தில் மெக்ஸிகோ. இங்கு 14,66,490 பேர். 14-ம் இடம் போலந்து நாட்டுக்கு. அங்கு 13 லட்சத்தைக் கடந்துவிட்டது கோரோனா பாதிப்பு. 15 -ம் இடத்தில் உள்ள ஈரானில், 12 லட்சத்திற்கு அதிகமான பாதிப்பு.

16 -ம் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவின் 11 லட்சம் கடந்த பாதிப்பு எண்ணிக்கை. 17 -ம் இடத்தில் உள்ள உக்ரைன் நாட்டில் 10 லட்சத்து 90 ஆயிரம். 18-ம் இடத்தில் உள்ள பெரு நாட்டில் 10 லட்சத்து 22 ஆயிரத்து 018 பேர்.

அடுத்தடுத்த இடங்களில் நெதர் லாந்து, இந்தோனிஷியா உள்ளிட்ட நாடுகள் இருகின்றன. உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கிவிட்டார்கள். அதனால், இதன் பாதிப்பு நாளடைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.