“20-ல 18 பேர் பாஜகவே இல்ல… ஆர்எஸ்எஸுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்ல” – சுவாமி ‘பேயாட்டம்’

 

“20-ல 18 பேர் பாஜகவே இல்ல… ஆர்எஸ்எஸுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்ல” – சுவாமி ‘பேயாட்டம்’

fதமிழக தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கைகோர்த்திருக்கிறது. அதிமுக பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக நேற்று அறிவித்தது. வேட்பாளர் பட்டியலில் சமீபமாக இணைந்த குஷ்பு, நேற்று காலையில் இணைந்த மருத்துவர் சரவணன் ஆகியோரின் பெயர் இடம்பெற்றிருந்தது. சரவணனுக்கு சீட் கொடுத்ததே பாஜகவினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

“20-ல 18 பேர் பாஜகவே இல்ல… ஆர்எஸ்எஸுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்ல” – சுவாமி ‘பேயாட்டம்’

இச்சூழலில் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் ட்வீட்டில், “தமிழகத்தில் பாஜக அறிவித்திருக்கும் 20 வேட்பாளர்களில் 18 பேர் பிற கட்சிகளால் கைவிடப்பட்டவர்கள். கடந்த காலங்களில் அவர்களுக்கு ஜன சங்கத்துடனோ, ஆர்எஸ்எஸ் அமைப்புடனோ எந்தச் சம்பந்தமும் இல்லை. அதேசமயம் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக சிஏஏ சட்டத்தை நீக்குவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது வேடிக்கையாக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசியிருந்த சுவாமி 20 தொகுதிகளிலும் பாஜக தோற்றுப் போகும் என்றும், ஒரு தேசிய கட்சி மாநில கட்சியிடம் ஐந்து சீட்டுக்கும் பத்து சீட்டுக்கும் கையேந்துவது கேவலமானது எனவும் கடுமையாகப் பேசியிருந்தார். சில நாட்களாகவே நாடு முழுவதும் பிற கட்சிகளிலிருந்து அதிருப்தியில் விலகுபவர்களை பாஜக ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றுவருகிறது. இதனால் பாஜகவில் இருக்கும் எவரும் கொள்கையால் பாஜகவால் இணையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவந்தது. தற்போது அக்கட்சியின் மூத்த தலைவரே அந்தக் குற்றச்சாட்டை வழிமொழிந்திருக்கிறார்.