18 மாதம் சிறைவைக்கப் பட்ட அமெரிக்க பத்திரிகையாளருக்கு 1300 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

 

18 மாதம் சிறைவைக்கப் பட்ட அமெரிக்க பத்திரிகையாளருக்கு 1300 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

உளவு பார்த்ததாகக் குற்றம் சாடி கைது செய்து சிறையில் அடைத்தது இரான் அரசு.

அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதள் வாஷிங்டன் போஸ்ட்.அதன் டெஹ்ரான் நகர அலுவலகத்தின் தலைவராக இருந்தவர் ஜேசன் ரியாஸான்.இவர் அமெரிக்காவுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாடி கைது செய்து சிறையில் அடைத்தது இரான் அரசு.

TTN

ஏகப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவில் குற்றச் செயலில் ஈடுபட்டு சிறையில் இருந்த 7 இராக்கியர்களுக்குப் பதிலாக ஜேசனும் மேலும் மூன்று அமெரிக்கர்களும் 2016-ம் ஆண்டு விடுவிக்கப் பட்டனர்.தன்னை சட்டவிரோதமாகக் சிறை வைத்ததாக இரான் அரசின் மீது ஜேசன் வழக்கித்தொடுத்திருந்தார்.

TTN

அமெரிக்காவின் தலை நகரான வாஷிங்டன் டி.சியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்ட் லியோன் ஈரான் அரசு ஜேசன் ரியானுக்கும் அவர் குடுப்பத்தினருக்கும் சேர்த்து 180 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு விதித்திருக்கிறார்.இதில் , ஜேசனுக்கு சட்ட உதவி.வழங்காதது,அவருக்கு உடல் அளவிலும்,உளவியல் ரீதியிலும் துன்புறுத்தியது,மிரட்டி வாக்கு மூலம் வாங்கியது போன்ற குற்றங்களுக்காக 150 மில்லியன் டாலர் அபராதமும்,சிறைப்படுத்தப் பட்ட ஜேசனுக்கு 23மில்லியன் நஷ்ட ஈடும்,அவரது மனைவி,சகோதரர், தாய் ஆகியோர் பட்ட மன உழைச்சலுக்காக,அவர்கள் மூவருக்கும் 7 மில்லியன் டாலர் தர வேண்டும் என்று இரான் அரசுக்கு நீதிபதி ரிச்சர்ட் லியோன் உத்தரவிட்டு இருக்கிறார். இந்தத் தீர்ப்பை இரான் எந்த அளவுக்கு மதிக்கப் போகிறது என்பது இன்னும் இரண்டொரு நாளில் தெரிந்து விடும்