என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது… ராமதாஸ் உருக்கம்

 

என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது… ராமதாஸ் உருக்கம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு இருபது சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி பாமக சார்பில் இன்று சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து பாமகவினர் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தாம்பரம், பெருங்களத்தூரிலேயே தடுத்தி நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த பாமகவினர் பேருந்துகள் மீதும், ரயில் மீதும் கற்களை வீசி பதற்றத்தை ஏற்படுத்தினர்.

என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது… ராமதாஸ் உருக்கம்

பல்லவன் இல்லம் முன்பு நடந்த போராட்டத்தில் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி பங்கேற்றார். பின்னர் இட ஒதுக்கீடுகுறித்து தலைமைசெயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இது குறித்து அவர், ‘’என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது…. உயிரும், உள்ளமும் சென்னை போராட்டக்களத்தில் தான் உள்ளன’’ என்று கட்சியினருக்கு உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.