சினிமா ஷூட்டிங் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து வங்கிகளை ஏமாற்றிய கும்பல்

 

சினிமா ஷூட்டிங் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து வங்கிகளை  ஏமாற்றிய கும்பல்

சென்னையில் சினிமா ஷூட்டிங் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து சொந்த பங்களாக்கள் என்று கூறி, வாடகை கார்களையும் வைத்துக்கொண்டு பிசினஸ் மேன்கள் என்று பொய் சொல்லி, பல வங்கிகளில் மோசடி செய்த கும்பல் இரண்டு ஆண்டு தேடலுக்கு அப்புறமாக இப்போது சிக்கியிருக்கிறது.

சென்னை வேளச்சேரி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் தில்லை கோவிந்தனிடம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , கார் வாடகை நிறுவனம் நடத்தி வருவதாகும், தொழிலை விரிவு படுத்த மேலும் கார்கள் வாங்குவதற்கு லோன் வேண்டும் என்று அய்யாதுரை, பால விஜய், முகமது மூசாமில் ஆகியோர் கேட்டுள்ளனர்.

சினிமா ஷூட்டிங் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து வங்கிகளை  ஏமாற்றிய கும்பல்

லோன் வாங்கிச்சென்ற அவர்கள் திரும்ப வந்து லோன் பணத்தை கட்டவே இல்லை. அப்போதுதான் அவர்கள் மோசடிகும்பல் என்பதும், கொடுத்ததெல்லாம் போலி ஆவணங்கள் என்றும், காட்டியதெல்லாம் சொந்த பங்களாக்கள் அல்ல சினிமா ஷூட்டிங் பங்களாக்கள் என்றும் தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

சினிமா ஷூட்டிங் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து வங்கிகளை  ஏமாற்றிய கும்பல்

இதையடுத்து தில்லைநாதன் கொடுத்த புகாரின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு போலீசார் மூன்று பேரையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடி வந்தனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, விஜயா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, யூகோ ஆகிய வங்கிகளில் இந்த மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளனர்.

இரண்டு தேடுதல் வேட்டையில் சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடில் உள்ள ஒரு பங்களாவில் தங்கியிருந்த மூவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர் போலீசார்.

அந்த கும்பலிடம் இருந்து 3. கோடியே 80 லட்சம் பணத்தையும், இரண்டு விலையுயர்ந்த கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.