அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

 

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

அதிர்ஷ்டவசமாக அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 42 பயணிகள் உயிர் தப்பி இருக்கிறார்கள்.

விமானம் புறப்பட தயாராக இருந்த நேரத்தில் விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டது. நடுவானில் விமானிக்கு மாரடைப்பு வந்திருந்தால் பெரும் அசம்பாவீதம் நடந்திருக்க கூடும். கடைசி நேரத்தில் விமானம் புறப்பட தயாராக இருந்த நேரத்திலேயே அவருக்கு விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 42 பயணிகளும் உயிர் தப்பினர். விமானியும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்திய அளவில் தொடர்ந்து 6வது இடத்தில் இருக்கிறது தமிழகம். இதற்காக இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விருது வழங்க இருந்தார்.

சென்னையில் இந்த காணொளி காட்சி மூலமாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்வில் பங்கேற்பது மாதிரி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக இன்று காலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் விஜயபாஸ்கர்.

காலை 8.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம் கடைசி நேரத்தில் ரத்தானதால், அவர் புதுக்கோட்டை சென்று அங்கிருந்தபடியே காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சரின் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கடைசிநேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதற்காண காரணத்தை தற்போது விமான நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. விமானிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதித்தபோது மாரடைப்பு என்று தெரியவந்ததையும் குறிப்பிட்டிருக்கிறது.

காலையில் பயணம் ரத்தானதால் எரிச்சல் அடைந்த 42 பயணிகள் தற்போது விமான நிலையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையால் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.