அழகிரி வைத்த டிமாண்ட்! ஸ்டாலினை சம்மதிக்க வைத்த மூத்த நிர்வாகி!

 

அழகிரி வைத்த டிமாண்ட்! ஸ்டாலினை சம்மதிக்க வைத்த மூத்த நிர்வாகி!

திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், அவர் அதிமுக பக்கம் தாவப்போகிறார் என்றும் பரபரப்பான செய்திகள் வந்த நிலையில் தென் மண்டல பொறுப்பாளர் பதவி கொடுத்து அவரை அமைதிப்படுத்தினார் கருணாநிதி.

கொஞ்சம் காலம் சாந்தமாக இருந்த அழகிரி, மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். திமுக பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே மீண்டும் வெடித்த மோதலால் செல்வி, கனிமொழி என்று குடும்ப உறுப்பினர்களும் சில திமுக மூத்த நிர்வாகிகளும் அழகியை சமாதானப்படுத்த முயன்றார்கள். ஆனாலும் அழகிரி சமாதானம் ஆகவில்லை.

அழகிரி வைத்த டிமாண்ட்! ஸ்டாலினை சம்மதிக்க வைத்த மூத்த நிர்வாகி!

கருணாநிதிக்கு அடுத்தபடியாக திமுக தன் கைக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் அழகிரி காய் நகர்த்தி வந்தார். கருணாநிதி அதற்கு ஒத்துப்போகாததால், திமுக மீதே பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் அழகிரி. தேமுதிகவுடன் திமுக கூட்டணி பேசிக்கொண்டிருப்பதும் தெரிந்தும் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்ததால், கருணாநிதி அழகிரிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த மோதலின் உச்சத்தினால் , அழகிரி ஆதரவாளர்களின் தீவிரத்தினால், ஸ்டாலின்மதுரை பக்கம் போவதே சிரமமாக இருந்தது என்று அப்போது பேச்சுக்கள் எழுந்தன.

அம்மாவை பார்க்க வந்தேன் என்று சொன்னாலும் அழகிரி கோபாலபுரம் வந்தாலே திமுகவில் கலவரமுகம்தான்.

அழகிரி வைத்த டிமாண்ட்! ஸ்டாலினை சம்மதிக்க வைத்த மூத்த நிர்வாகி!

அப்படித்தான் அன்றொரு தினமும், கோபாலபுரம் வந்த அழகிரி, ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசி, அழகிரி மிரட்டல் விடுத்ததாகவும் அதனால் அதிர்ந்து போன கருணாநிதிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் வந்து ஆறுதல் கூறினர்.

இதன் அடுத்த கட்டமாக 24.1. 2014ல் தென் மண்டல பொறுப்பாளர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார் அழகிரி.

அழகிரி வைத்த டிமாண்ட்! ஸ்டாலினை சம்மதிக்க வைத்த மூத்த நிர்வாகி!

திமுக உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இது குறித்து அப்போது பேராசிரியர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், ’’தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு.கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது’’என்றும்,

அழகிரி வைத்த டிமாண்ட்! ஸ்டாலினை சம்மதிக்க வைத்த மூத்த நிர்வாகி!

’’இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும், அவர், தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’’ என்று தெரிவித்திருந்தார்.

அதன்பின்னரும் திமுகவை கைப்பற்ற அழகிரி எத்தனையோ முயற்சிகள் எடுத்து வந்ததாக செய்திகள் வந்தன. ரஜினி கட்சி ஆரம்பித்தால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அழகிரிதான் என்றும் பேச்சு எழுந்தது.

அழகிரி வைத்த டிமாண்ட்! ஸ்டாலினை சம்மதிக்க வைத்த மூத்த நிர்வாகி!

அழகிரி வகித்து வந்த தென் மண்டல பொறுப்பாளர் பதவியை கனிமொழிக்கும் தரவேண்டும் என்றும் கட்சிக்குள் பரபரப்பு பேச்சு எழுந்தது.

ஸ்டாலின் மீது உள்ள ஆத்திரத்தால் திமுகவின் தென் மண்டல ஓட்டுக்களை பிரித்து வந்த அழகிரி, கருணாநிதி இருக்கும் வரைதான் திமுக கைகூடவில்லை. எப்படியும் ஸ்டாலின் காலத்திலாவது திமுகவில் தனக்கு பெரிய பொறுப்பு கிடைக்கும் என்றுதான் கொஞ்ச காலம் அமைதியாக இருந்து வந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதுவும் நடக்காமல் போனதால்தான், தன்னோட பதவிக்கு கனிமொழி பெயர் அடிபட்டதால்தான், அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்கிறார் என்றும், பாஜகவில் சேரப்போகிறார் என்றும் பேச்சுக்கள் பரபரப்பு பேச்சுக்கள் எழுந்தன.

அழகிரி வைத்த டிமாண்ட்! ஸ்டாலினை சம்மதிக்க வைத்த மூத்த நிர்வாகி!

ஆதரவாளர்களை அழைத்து பேசி முடிவை அறிவிப்பதாக அழகிரியும் சொன்னதை அடுத்து, கடந்த இரண்டு முறைதான் கோட்டை விட்டாச்சு. இந்த முறையாவது கோட்டையை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தால், இடையில் சிக்கல் செய்கிறாரே அழகிரி என்று நினைத்த திமுக மூத்த நிர்வாகி ஒருவர், திமுகவில் மீண்டும் சேரச்சொல்லி அழகிரியிடம் பேசியிருக்கிறார். அப்போது அழகிரி வைத்த சில டிமாண்டுகளை முதலில் ஏற்க மறுத்தாலும், சூழ்நிலை கருதி ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவும் சொல்கிறார்கள் பாண்டிய மண்டலத்தினர்.

கடைசிவரைக்கும் எனக்குத்தான் கட்சியில் முக்கியத்துவம் இல்லை. ஆனால், என் மகனுக்காவது முக்கியத்துவம் இருக்கணும் என்று விரும்புகிறேன். அதுவும் உதயநிதிக்கு இருக்கும் முக்கியத்துவம் மாதிரி என் மகன் தயாநிதிக்கும் வேண்டும் என்று அழகிரி டிமாண்ட் வைத்ததாகவும், இடையில் நின்ற அந்த திமுக மூத்த நிர்வாகிதான், ஸ்டாலினை சம்மதிக்க வைத்ததாகவும் சொல்கிறார்கள் பாண்டிய மண்டலத்து சீனியர்கள்.