பாஜக போட்ட வாய்ப்பூட்டு: திமுகவிடம் பேசிய எஸ்.வி.சேகர்!

 

பாஜக போட்ட வாய்ப்பூட்டு:  திமுகவிடம் பேசிய எஸ்.வி.சேகர்!

திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரையும் பாஜக தன்பக்கம் இழுத்து வரும் நிலையில், பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் இன்று திமுக கோட்டைக்குள் புகுந்திருக்கிறார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 43 வது பிறந்தநாள் இன்று. நிவர் புயல் காரணத்தினால் தனது பிறந்தநாளை பேனர், கட்- அவுட் என்று ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக நிவாரணப்பணிகளில் அக்கறையை காட்டுங்கள் என்று உதயநிதி உத்தரவிட்டதாகவும், அதன்படிதான் திமுகவினர் ஆங்காங்கே நிவாரண உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரியவருகிறது.

பாஜக போட்ட வாய்ப்பூட்டு:  திமுகவிடம் பேசிய எஸ்.வி.சேகர்!

பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா சென்ற உதயநிதி, அண்ணா நினைவிடத்திலும், கருணாநிதி நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு வீட்டுக்கு வந்தது முதலாக கட்சியினர் அவருக்கு நேரிலும், போனில் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் அவருக்கு நேரில் வாழ்த்து சொல்லி அதிரடி காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக எல்லையை தாண்டி, திமுக கோட்டைக்குள் புகுந்திருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர். உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு சென்ற அவர் உதயநிதிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்திவிட்டு வந்திருக்கிறார்.

ஒரு கட்சியில் இருந்துகொண்டு இன்னொரு கட்சி பிரமுகர்களை சந்தித்து சலசலப்பை ஏற்படுத்துவது எஸ்.வி.சேகருக்கு வழக்கம்தான். காங்கிரசில் இருந்தபோதும், அதிமுகவில் இருந்துகொண்டு திமுக பிரமுகர்களிடம் அவர் காட்டிய நெருக்கமும்,சலசலப்பும் அதிகம். ஆனால் அந்த சலசப்பு எல்லாமே அவரை நகைச்சுவை நடிகர் என்றே விமர்சித்து வந்தனர்.

இப்போதும் அப்படித்தான், ‘நகைச்சுவை நடிகர்’என்று அவரை பாஜவினர் விமர்சித்து வருகின்றனர். நகைச்சுவை நடிகர் எஸ் .வீ. சேகரை சந்தானத்தின் துணை நடிகர் உதயநிதி சந்தித்து ஆசி பெற்றார் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

பாஜக சார்பில் கருத்து சொல்கிறேன் என்று பரபரப்பாக இருந்த எஸ்.வி.சேகரின் வாயை சமீப காலமாக அடைத்து வைத்திருக்கிறது பாஜக. அந்த ஆத்திரத்தில்தான் உதயநிதியை சந்தித்து பேசிருக்கிறார் எஸ்.வி.சேகர் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்துவிட்டார் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.