அதிமுகவுக்கு தாவிய திமுக முக்கிய நிர்வாகிகள்

 

அதிமுகவுக்கு தாவிய திமுக முக்கிய நிர்வாகிகள்

எல்லா காலகட்டத்திலுமே கட்சி தாவல் என்பது இருக்கும் என்றாலும் தேர்தல் நேரங்களில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இது எல்லா கட்சிகளுமே சந்திக்கும் வழக்கமான பிரச்சனைதான். ஆனாலும், தங்களது கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிமுகவுக்கு தாவியிருப்பதான் திமுகவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

மு.க.ஸ்டாலினை கிண்டலடித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒட்டபட்டிருந்த போஸ்டர்களை எல்லாம் திமுகவினரால் கிழிக்க முடிந்தாலும், கோவையில் கிழிக்க முடியாததால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அங்கிருப்பதால்தான் அது முடியவில்லை என்று முக்கிய திமுக நிர்வாகிகள் பலரும் ஆத்திரப்பட்டனர்.

அதிமுகவுக்கு தாவிய திமுக முக்கிய நிர்வாகிகள்

இதை கண்டித்துதான் உதயநிதியும் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்திப்பார்த்தார். அதன்பிறகும் ஸ்டாலினை கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இப்போது ஓரளவுகு போஸ்டர்களை கிழிக்க அனுமது கொடுத்திருக்கிறது போலீஸ்.

போஸ்டர் விவகாரத்தில் இருந்து அமைச்சர் வேலுமணியை போட்டு தாக்கி வருகிறதி திமுக. நிழல் முதல்வர் என்று எஸ்.பி.வேலுமணியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை முக்கிய நிர்வாகிகள் அதிமுக பக்கம் சென்றிருப்பதால்தான் திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி எம்.ஜி.ஆர். மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபு, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சதீஷ் உட்பட சில முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கோவை வடக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.சந்திரசேகர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.