மருமகனை கோவிலுக்குள் உயிருடன் எரித்துக்கொன்ற மாமனார் குடும்பம்

 

மருமகனை கோவிலுக்குள் உயிருடன் எரித்துக்கொன்ற மாமனார் குடும்பம்

தெலுங்கானா மாநிலம் பால்வந்தபூர் மஞ்சுநாத் கோவிலுக்குள் இருந்து நேற்று முன் தினம் இரவு கரும்புகையும், மாமிசம் கருகும் வாடையும் வந்ததும் அப்பகுதியினர் அதிர்ச்சி்யில் குவிந்தனர்.

அங்கே கோவில் வளாகத்தில் இருந்த ஒரு அறையில் நாற்காலியில் கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில், ஒரு ஆண் எரிந்து கரிக்கட்டனது தெரிந்தது.

மருமகனை கோவிலுக்குள் உயிருடன் எரித்துக்கொன்ற மாமனார் குடும்பம்

இதையடுத்து எரிந்து யார்? எரித்தது யார்? என்று கூட்டத்தினரிடையே பதட்டம் நீடித்த நிலையில், அங்கு தண்ணீர் குடத்துடன் கிருஷ்ணவேணி என்ற பெண் வந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது, என்னையும் என் கணவர் பவன்குமாரையும் சொந்தக்காரங்க இந்த கோவிலுக்கு வரச்சொன்னாங்க. அதனல் நாங்க வந்தோம். என்னை தண்ணி எடுத்து வரச்சொன்னாங்க. பக்கத்தில் தண்ணீர் இல்லாததால் ரொம்ப தூரம் போய் தண்ணீர் எடுத்து வர்றேன் என்ற
விபரத்தைச்சொன்னதும், அறையில் எரிந்துகிடப்பது யார் அப்பெண்ணை அழைத்து போய் காட்டியதும், அது தன் கணவர்தான் என்பது என்று சொல்லிவிட்டு கதறினார். கூட இருந்த சொந்தக்காரர்களை காணாமல் தேடினார்.

என்ன நடந்தது என்று அங்கிருந்தவர்கள் விசாரித்தபோது, ‘’தன் கணவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினியராக இருக்கிறார் என்றும், கணவரின் மைத்துனர் கடந்த வாரம் மாரடப்பால் இறந்துவிட்டதால், அதற்கு கணவர் செய்த மந்திரம்தான் காரணம் என்று தன் வீட்டார் சொல்லிவந்ததாகவும் கூறினார்.

மேலும், மஞ்சுநாத் கோவிலில் சடங்குகள் செய்ய வேண்டும் என்று எங்களை அழைத்தார்கள். அதை நம்பி நாங்களும் வந்தோம். என்னை தண்ணி எடுக்க போகச்சொல்லிட்டு, என் கணவரை எரித்து கொண்றிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு கதறினார்.

கிருஷ்ணவேணியின் சகோதரர்தான் மாரடைப்பால் இறந்தவர் என்பதும், அவருக்கும் பவன்குமாருக்கும் இருந்த கருத்து வேறூபாட்டினால், பவன்குமார் மந்திரம் செய்ததால்தான் அவர் இறந்து போனார் என்று நம்பி, இறந்தபோனவரின் மனைவிதான் சடங்கு என்று கோவிலுக்கு அழைத்து, கிருஷ்ணவேனியை தண்ணி எடுக்க அனுப்பியிருக்கிறார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.