அசாம் முன்னாள் முதல்வர் மிகவும் கவலைக்கிடம்

 

அசாம் முன்னாள் முதல்வர் மிகவும் கவலைக்கிடம்

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மாநிலத்தின் சுகாதார அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகோ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். குவாஹாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினார்.

அசாம் முன்னாள் முதல்வர் மிகவும் கவலைக்கிடம்

கொரொனாவில் இருந்து அவர் மீண்டுவிட்டாலும், கொரோனா வைரசின் தாக்கத்தினால் அவரது உடலில் பல்வேறு உறுப்புகள் பாதிப்படைந்தன. நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்ததால் அவர் கடந்த 21ம்தேதி அன்று மீண்டும் குவாஹாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.

ஆனாலும், இன்று காலையில் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்றிருப்பதாக அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

இதையடுத்து, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால், தனது அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, குவாஹாத்திக்கு அவசர அவசரமாக திரும்பிக்கொண்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.