யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

திமுக அழுத்தம் கொடுத்ததால்தான் 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தார் என்று ஸ்டாலின் உள்பட திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் சொல்லி வரும் வேளையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்கள். ஆகவே, இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும் என்று மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார்.

யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

திமுக ஏற்கும் என்று ஸ்டாலின் அறிவித்த பிறகு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததால், முதலிலேயே முதல்வர் அறிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய பொன்முடி, முதல்வர் தற்போது அறிவித்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த அழுத்தமே காரணம் என்றார்.

இந்த சிறிய விஷயத்தை கூட திமுக அறிவித்த பிறகுதான் அதிமுக அரசு செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் வழியில்தான் அதிமுக அரசு நடக்கிறதா? என்று கேட்டார் துரைமுருகன்.

யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினையும் திமுகவினரையும் சாடினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ‘’ஸ்டாலின் என்னமோ முதல்வர் மாதிரியே நடந்துக்கிறார். முதல்வரும், துணை முதல்வரும்தான் மருத்துவ கல்லூரியில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தார்கள். ஆனால், அதை ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார். யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு’’என்று சொன்னதும், கூட்டத்தின கலகலவென சிரித்தனர்.