அமித்ஷாவிடம் சரண்டர் ஆன அமைச்சர் ஜெயக்குமார்

 

அமித்ஷாவிடம் சரண்டர் ஆன அமைச்சர் ஜெயக்குமார்

அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து கடுமையாக விமர்சித்து வந்த அமைச்சர் ஜெயக்குமார் சென்னை லீலாபேலஸ் ஓட்டலில் தங்கி இருக்கும் அமித்ஷாவை தனியாக சென்று சந்தித்து பேசினார். மாலை 4.30 மணிக்கு அரசு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் 4 மணிக்கு தனியாக சந்தித்து பேசினார்.

அமித்ஷாவிடம் சரண்டர் ஆன அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் என்றும், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருந்தபோது, அதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அமித்ஷா வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவை வளர்க்கவே அவர் தமிழகம் வருகிறார். அரசு நிகழ்ச்சிகள் பங்கேற்பதாக இருந்தால் எங்களுக்கு நிகழ்ச்சி நிரல் வந்திருக்குமே. அப்படி எதுவும் வரவில்லை. ஒருவேளை அவர் வருவதும் நிகழ்ச்சிளில் பங்கேற்பது பற்றியும் தமிழக பாஜக தலைவருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

அமித்ஷாவிடம் சரண்டர் ஆன அமைச்சர் ஜெயக்குமார்

பின்னர், அமித்ஷா சென்னை வருவதும், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் உறுதியான பின்னர், அமித்ஷா வந்தால் அவரிடம் ஏழு பேரின் விடுதலை குறித்து வலியுறுத்துவோம் என்று சொல்லிவந்தார்.

அமித்ஷாவிடம் சரண்டர் ஆன அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் இன்று மதியம் 1.40 மணிக்கு இரண்டு நாள் பயணமாக அமித்ஷா சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன்பின்னர் அமித்ஷா சென்னை அடையாறு அருகே இருக்கும் லீலா பேலஸ் ஓட்டலில் சென்று தங்கி இருக்கிறார். மாலை 4.30 மணிக்கு அவர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

இதற்கிடையில் மாலை 4 மணிக்கு அமைச்சர் ஜெயக்குமார், லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்று அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசினார். அமித்ஷா வருகை குறித்து விமர்சித்து வந்ததால் அவரின் கோபத்தை தணிக்க சந்தித்து பேசினார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.