அதிரவைத்த லாஸ்லியா தந்தையின் அந்த வீடியோ.. உறவினர் சொல்லும் விளக்கம்

 

அதிரவைத்த லாஸ்லியா தந்தையின் அந்த வீடியோ.. உறவினர் சொல்லும் விளக்கம்

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லாஸ்லியா பிக்பாஸ்-3 சீசனில் பங்கேற்று பிரபல ஆகி நடிகையும் ஆகிவிட்டார். இவரது தந்தை மரியநேசன் குடும்பத்தை பிரிந்து சென்று கனடாவில் வேலை செய்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா பங்கேற்றதன் மூலமாகத்தான் மரியநேசன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார்.

எதிர்பார்த்தபடியே திரைப்பட வாய்ப்புகள் வந்ததால் லாஸ்லியா சென்னையில் தங்கி இருந்தார். அவரின் அம்மாவும், இரண்டு இளம் சகோதரிகளும் இலங்கையில் வசித்து வந்தனர்.

அதிரவைத்த லாஸ்லியா தந்தையின் அந்த வீடியோ.. உறவினர் சொல்லும் விளக்கம்

இந்நிலையில், கனடனாவில் பணி்யாற்றி வந்த மரியநேசன் மாரடைப்பினால் மரணம் அடைந்துவிட்டதாக செய்தி வந்தது. கொரோனா காலம் என்பதால் அவரது உடலை உடனடியாக இலங்கைக்கு எடுத்துவருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

சென்னையில் இருந்த லாஸ்லியா, தந்தையின் உடலைக்காண தவித்தார். இலங்கைக்கு உடல் வருகிறது என்றும் தெரிந்தும், கொரோனா காலத்தினால் அவரால் இலங்கை செல்வதில் சிக்கல் இருந்தது. ஆனால், பிக்பாஸ்-3 சீசனில் அவருடன் பங்கேற்ற போட்டியாளர்கள் மூன்று பேர் லாஸ்லியா இலங்கை செல்வதற்கு உதவினார்கள். அவர்களும் லாஸ்லியாவுடன் இலங்கை சென்றனர்.

மரியநேசன் உடல் வந்ததும் அஞ்சலி செலுத்திவிட்டு சென்னை திரும்பலாம் என்று சென்றவர்கள், மரியநேசன் உடல் இலங்கைக்கு வர இன்னும் 2 வாரங்கள் ஆகும் என்பதால், உடல் வந்ததும் வரலாம் என்று, லாஸ்லியாவை இலங்கையில் அவரது வீட்டிலேயே விட்டுவிட்டு சென்னை திரும்பிவிட்டனர் நண்பர்கள்.

அதிரவைத்த லாஸ்லியா தந்தையின் அந்த வீடியோ.. உறவினர் சொல்லும் விளக்கம்

இதற்கிடையில், கட்டிலில் குப்புற படுத்தபடியே உயிரிழந்த மரியநேசனின் வீடியோ வெளியாகி அதிரவைத்தது. அவர் உடல் அருகே ஒரு கடிதம் இருந்ததால், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாரா மரியநேசன் என்று சர்ச்சை எழுந்தது.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கனடாவில் இருக்கும் மரியநேசனின் உறவினர். ‘’வேலை முடித்துவிட்டு இரவில் சென்று படுத்தார். காலையில் எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை. மரியநேசனின் மரணம் இயற்கையானது’’என்று தெரிவித்திருக்கிறார். அவர் மேலும், ‘’அவர் கடிதம் எதுவும் எழுதவில்லை. அருலில் இருந்தது வெறும் வெற்று பேப்பர்தான்’’ என்பதையும் படம் பிடித்து காட்டியுள்ளார்.