அமைச்சர் வீட்டு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உதயநிதி ஆலோசனை?

 

அமைச்சர் வீட்டு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த  உதயநிதி ஆலோசனை?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் ஒட்டி வந்த போஸ்டர்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர். சில மாவட்டங்களில் திமுகவினரின் புகாரின் பேரில் போலீசாரே கிழித்து எறிந்தனர். ஆனால், கோவை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்து திமுகவினர் புகாரளித்தும் போலீசார் கண்டுகொள்ளவில்லை.

அமைச்சர் வீட்டு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த  உதயநிதி ஆலோசனை?

திமுகவினரே சென்று போஸ்டர்களை கிழிக்க முற்பட்டபோதும் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அழுத்தத்தினால்தான் இந்த அராஜகம் நடக்கின்றது என்று உடனே கோவையில் பெரும் கண்ட ஆர்ப்பாட்டத்தினை நடத்தி, ‘’அசிங்கமாக போஸ்டர் அடிக்க எங்களுக்கும் தெரியும்’’என்று அந்த கூட்டத்தில் கொந்தளித்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அமைச்சர் வீட்டு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த  உதயநிதி ஆலோசனை?

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாகவே கைது செய்யப்பட்ட திமுகவினர் விடுவிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு அந்த விவகாரம் முடிந்துவிடவில்லை. மீண்டும் தொடங்கி இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை உயர்த்தியும், மு.க.ஸ்டாலினை தாழ்த்தியும் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்கள் திமுகவினரிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியது. கோவை டவுன் ஹால் ஏரியாவில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினரே கிழித்து எறிந்துள்ளனர்.

அமைச்சர் வீட்டு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த  உதயநிதி ஆலோசனை?

உதயநிதியிடம் கட்சியினர் இதை தெரிவித்தபோது, ‘’மறுபடியும் ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாங்களா..’’என்று ஆத்திரப்பட்டிருக்கிறார்.

அநேகமாக குனியமுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடக்கலாம் என்று தெரிகிறது. அதுகுறித்தும் கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறாராம் உதயநிதி.

போன முறை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, போஸ்டர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த ஆர்ப்பாட்டம் குனியமுத்தூர்( அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊர்) காவல்நிலையம் முன்பாகத்தான் இருக்கும் என்று எச்சரித்திருந்தார் உதயநிதி.