ஸ்டாலின் உடல்நிலை… லண்டனுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரி

 

ஸ்டாலின் உடல்நிலை… லண்டனுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரி

ஒவ்வொரு வருடமும் லண்டன் சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்து வந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த வருடம் ஜனவரி மாதம் அவர் லண்டன் செல்வதாக இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் அப்போது வெளிநாடுகளில் அதிகம் இருந்ததால், அந்த பயணம் தடைபட்டது.

அதன்பின்னர், ஜூன் மாதத்தில் லண்டன் சென்று ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னதாகவும், ஆனால், பொதுமுடக்கத்தினால் சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டிருந்ததாலும் என்ன செய்வதென்று தவித்ததாகவும், தனி விமானம் மூலம் லண்டன் செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலில் உண்மையில்லை என்றும், தனி விமானம் கேட்டு திமுக யாரையும் அணுகவில்லை என்றும் திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்டாலின் உடல்நிலை… லண்டனுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரி

லண்டன் போக முடியாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளை தீவிரப்படுத்தினார் ஸ்டாலின். வெளியூர் பயணங்களை தவிர்த்து, காணொளி வாயிலாகவே கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

கொரோனா தாக்கம் இன்னமும் குறையாத சூழலில், ஸ்டாலின் லண்டன் போக முடியாததால் அவரது ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், . பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு இங்கிருக்கும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சைகள் அளிப்பார்கள் என்றும், தற்போதைக்கு ஸ்டாலினுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.