173 : துர்காவுக்கு ஸ்டாலின் கொடுத்த பிறந்தநாள் பரிசு

 

173 : துர்காவுக்கு ஸ்டாலின் கொடுத்த பிறந்தநாள் பரிசு

எதிர்வரும் சட்டமன்ற தேதைல் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில் , தனித்து 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக. அத்துடன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

173 : துர்காவுக்கு ஸ்டாலின் கொடுத்த பிறந்தநாள் பரிசு

173 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை இன்று 12.3.2021ல் அறிவித்தார் ஸ்டாலின். முன்னதாக அவர், கோபாலபுரம் சென்று கருணாநிதி படத்தின் முன்பு வேட்பாளர்கள் பட்டியலை வைத்து வணங்கினார் ஸ்டாலின். அதன் பின்னர், மெரினா சென்று அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர்களை வைத்து வணங்கிய ஸ்டாலின், பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று 12.15 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்.

173 : துர்காவுக்கு ஸ்டாலின் கொடுத்த பிறந்தநாள் பரிசு

கடந்த 10ம் தேதியே வெளியாக வேண்டிய திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்றைக்கு வெளியாகி இருக்கிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, சோதிடர் சொன்ன தேதி. வெற்றி வாய்ப்பினை உறுதி செய்ய அமாவாசை தினத்தில்தான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அழுத்தமாக சொல்லிவிட்டாராம் சோதிடர். அதன்படி இன்றைக்குத்தான் வெளியிட வேண்டும் என்று ஸ்டாலினிடம் உறுதியாக கூறிவிட்டாராம் துர்கா. மேலும், வேட்பாளர்களை பட்டியலை சோதிடர் சொன்னபடி குலதெய்வம் உள்பட தமிழகத்தில் உள்ள சில கோயில்களுக்கு சென்று தெய்வங்களின் பாதத்தில் வைத்து பூஜை செய்துவிட்டு வந்திருக்கிறார் துர்கா.

173 : துர்காவுக்கு ஸ்டாலின் கொடுத்த பிறந்தநாள் பரிசு

12.3.20121 இன்றைய தினத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. மனைவி துர்கா பிறந்தநாள் என்பதால் அவரை சந்தோசப்படுத்த இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்துள்ளார் ஸ்டாலின் என்றும் கூறப்படுகிறது.

தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம் கூறுவதுபோல, மனைவிக்கு பிறந்த நாள் பரிசாகத்தான் இன்றைய தினத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருப்பாரோ ஸ்டாலின் என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல்:

சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்

எழும்பூர் – பரந்தாமன்,

திருவிக நகர் – தாயகம் கவி,

வில்லிவாக்கம் – வெற்றியழகன்

பெரம்பூர் – ஆர்.டி.சேகர்,

ஆர்.கே.நகர் – ஜே.ஜே.எபிநேசர்,

கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்.

பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ்,

நாகர்கோவில் – சுரேஷ்ராஜன்,

கன்னியாகுமரி – ஆஸ்டின்

ராதாபுரம் – அப்பாவு,

பாளையங்கோட்டை – அப்துல் வஹாப்,

அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்

நெல்லை – லட்சுமணன்,

ஆலங்குளம் – பூங்கோதை ஆலடி அருணா

திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்,

தூத்துக்குடி – கீதா ஜீவன்

போடி – தங்கதமிழ்ச்செல்வன்,

ஆண்டிப்பட்டி – மகாராஜன்,

திருமங்கலம் – மணிமாறன்

மதுரை மேற்கு – சின்னம்மாள்,

மதுரை மத்திய தொகுதி – பழனிவேல் தியாகராஜன்

மதுரை வடக்கு – தளபதி,

சோழவந்தான் – வெங்கடேஷன்

திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன்,

முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன்,

பரமக்குடி – சே.முருகேசன்,

திருச்சுழி – தங்கம் தென்னரசு

அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,

கம்பம் – ராமகிருஷ்ணன்

ஆலங்குடி – மெய்யநாதன்,

திருமயம் – எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை – முத்துராஜா,

விராலிமலை – பழனியப்பன்,

பேராவூரணி – அசோக்குமார்

பட்டுக்கோட்டை – அண்ணாதுரை,

ஒரத்தநாடு – ராமச்சந்திரன்,

தஞ்சை – நீலமேகம்

திருவையாறு – துரை சந்திரசேகரன்,

கும்பகோணம் – அன்பழகன்

நன்னிலம் – ஜோதிராமன்,

திருவாரூர் – கலைவாணன்,

மன்னார்குடி – டி.ஆர்.பி ராஜா

வேதாரண்யம் – வேதரத்தினம்,

பூம்புகார் – நிவேதா முருகன்,

புவனகிரி – துரை சரவணன்

குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர்செல்வம்,

நெய்வேலி – சபா ராஜேந்திரன்

ஜெயங்கொண்டம் – கே.எஸ்.கண்ணன்,

குன்னம் – சிவசங்கர்,

பெரம்பூர் – பிரபாகரன்

துறையூர் – ஸ்டாலின் குமார்,

முசிறி – தியாகராஜன்,

மணச்சநல்லூர் – கதிரவன்

லால்குடி – சவுந்திரபாண்டியன்,

திருவெறும்பூர் – அன்பில் மகேஷ்,

திருச்சி மேற்கு – கே.என்.நேரு

கரூர் – வி.செந்தில்பாலாஜி,

அரவக்குறிச்சி – இளங்கோ,

நத்தம் – ஆண்டி அம்பலம்

ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி,

பழனி – ஐபி செந்தில்குமார்,

மடத்துக்குளம் – ஜெயராமகிருஷ்ணன்

சிங்காநல்லூர் – கார்த்திக்,

தொண்டாமுத்தூர் – கார்த்திகேய சிவசேனாதிபதி,

கவுண்டம்பாளையம் – ஆர்.கிருஷ்ணன்

கோபிச்செட்டிபாளையம் – மணிமாறன்,

பவானி – கே.பி.துரைராஜ்,

காங்கேயம் – சாமிநாதன்

தாராபுரம் – கயல்விழி செல்வராஜ்,

மொடக்குறிச்சி – சுப்புலட்சுமி ஜெகதீசன்

பரமத்திவேலூர் – கேஎஸ் மூர்த்தி,

ராசிபுரம் – மதிவேந்தன்,

வீரபாண்டி – தருண்

சேலம் தெற்கு – சரவணன்,

சேலம் மேற்கு – ஆர்.ராஜேந்திரன்,

சங்ககிரி – ராஜேஸ்,

எடப்பாடி – சம்பத்குமார்

மேட்டூர் – சீனிவாச பெருமாள்,

ஆத்தூர் – ஜீவா ஸ்டாலின்,

ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்

திருக்கோவிலூர் – பொன்முடி,

விக்கிரவாண்டி – புகழேந்தி,

விழுப்புரம் – லட்சுமணன்,

திண்டிவனம் – சீத்தாபதி சொக்கலிங்கம்,

மயிலம் – மாசிலாமணி,

செஞ்சி – மஸ்தான்

செய்யாறு – ஓ.ஜோதி,

ஆரணி – எஸ்எஸ் அன்பழகன்,

போளூர் – சேகரன்,

கலசப்பக்கம் – சரவணன்

கீழ்பென்னாத்தூர் – பிச்சாண்டி,

திருவண்ணாமலை – எவ வேலு,

செங்கம் – மு.பெ.கிரி

பாப்பிரெட்டிபட்டி – பிரபு ராஜகுமார்,

பென்னாகரம் – இன்பசேகரன்,

பாலக்கோடு – முருகன்

ஓசூர் – ஒய்.பிரகாஷ்,

வேப்பனஹள்ளி – முருகன்,

கிருஷ்ணகிரி – செங்குட்டுவன்,

பர்கூர் – மதியழகன்

திருப்பத்தூர் – நல்லதம்பி,

ஜோலார்பேட்டை – தேவராஜு,

ஆம்பூர் – வில்வநாதன்

குடியாத்தம் – அமலு,

அணைக்கட்டு – நந்தகுமார்,

வேலூர் – கார்த்திகேயன்,

ராணிப்பேட்டை – காந்தி

உத்தரமேரூர் – சுந்தர்,

செங்கல்பட்டு – வரலட்சுமி மதுசூதனன்,

தாம்பரம் – எஸ்.ஆர்.ராஜா,

காட்பாடி – துரைமுருகன்,

சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்,

ஆவடி – சா.மு.நாசர்

திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன்,

மாதவரம் – சுதர்சனம்,

அம்பத்தூர் – ஜோசப் சாமுவேல்

மதுரவாயல் – காரப்பாக்கம் கணபதி,

மயிலாப்பூர் – த.வேலு,

சைதாப்பேட்டை – மா.சுப்ரமணியம்

விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா,

அண்ணா நகர் – மோகன்