அர்ச்சகர் மகன் சொன்ன உண்மை! ஆடிப்போன அமைச்சர்!

 

அர்ச்சகர் மகன் சொன்ன உண்மை! ஆடிப்போன அமைச்சர்!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்வளர்ச்சி துறை அமைச்சரிடம், தான் படிக்கும் பள்ளியில் தமிழ் கற்றுக்கொடுப்பதில்லை என்று சொல்லி அதிரவைத்துள்ளார் அர்ச்சகரின் மகன்.

அர்ச்சகர் மகன் சொன்ன உண்மை! ஆடிப்போன அமைச்சர்!

தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று சென்னை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு தன் மனைவியுடன் சென்றார். கட்சியினரும் உடன் வந்திருந்தனர். அங்கே சாமி தரிசனம் செய்துவிட்டு சிறிது நேரம் கோயில் வளாகத்தில் உட்கார்ந்திருந்தார் பாண்டியராஜன்.

அப்போது கோயிலில் 12 வயது சிறுவன் அர்ச்சனை செய்துகொண்டிருப்பதை பார்த்த அமைச்சர்,அவனை அழைத்தார். ‘’நீ யாரு என்ன படிக்குற..’’என்று கேட்க, ‘’நான் அர்ச்சகரோட மகன். திருபோவனத்தில் படிக்கிறேன்’’என்று சொல்ல, ‘’நீ படிக்கிற பள்ளியில தமிழ் சொல்லிதர்றாங்களா?’’ன்னு அமைச்சர் கேட்க, ‘’தமிழ் சொல்லித்தரல.,. ஆனா, சமஸ்கிருதம் எல்லாம் சொல்லித்தர்றாங்க’’ன்னு சொல்ல, ஆடிப்போயிட்டார் அமைச்சர்.

பின்னர் அவர் சமாளித்து, ’’தமிழ் நம்ம தாய்மொழி. அதபுரிஞ்சுகிட்டு அதிலயும் ஆர்வம் காட்டணும்’’என்று சொல்லி அனுப்பினார்.