திருப்பதி பெயரில் சீட்டு வசூல்: நாமம் போட்ட திமுக பிரமுகர்

 

திருப்பதி பெயரில் சீட்டு வசூல்: நாமம் போட்ட திமுக பிரமுகர்

ஏலச்சீட்டு நடத்தி 40க்கும் மேற்பட்டோரிடம் 50 லட்சட்திற்கும் மேல் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவாகிவிட்டதால், அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூரில் நகர திமுக துணை செயலாளராக இருப்பவர் ஜெயா. இவர் ‘திருப்பதி’ என்ற பெயரில் சிட் பண்ட் நடத்தி வந்தார். மாதம்தோறும் பலரிடம் பணம் வசூலித்து ஏலச்சீட்டினை தொடர்ந்து நடத்தி வந்தார்.

திருப்பதி பெயரில் சீட்டு வசூல்: நாமம் போட்ட திமுக பிரமுகர்

திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்ததாலும் தொடர்ந்து சிட்பண்ட் நடத்தி வந்ததாலும் மக்கள் இவரிடம் தொடர்ந்து பணம் கட்டி வந்தனர்.

ஏலம் எடுத்தவர்களுக்கு சரியாக பணம் கொடுத்து வந்தவர், கடந்த சில மாதங்களாக பணத் தை சரிவர கொடுக்காததால் பிரச்சனை எழுந்தது. வாடிக்கையாளர்கள் கேட்டுப்பார்த்தும் பணம் வராததால், அச்சமடைந்தனர். பணம் திரும்பவும் வராமல் போய்விடுமோ என்று 40 பேர்களுக்கு மேல் சூலூர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசில் புகார் கொடுத்ததுமே ஜெயா தலைமறைவாகிவிட்டார்.

போலீஸ் விசாரணையில், சீட்டு எடுத்தவர்களில் சிலர் முறையாக பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்ததால் ஜெயா நஷ்டமடைந்ததாகவும், அதனால்தான் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அக்கம் பக்கத்தில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், ஏமாற்றும் நோக்கத்தில்தான் ஜெயா அப்படி செய்துள்ளார் என்றும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.

40க்கும் மேற்பட்டவர்களிம் இருந்து50 லட்சத்திற்கும் மேல் பணம் வசூல் செய்திருக்கும் ஜெயாவை பிடித்தால்தான் மேற்கொண்டு உண்மை தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.