17 வருஷங்களா குகைக்குள் வாழ்ந்த குற்றவாளி.. பாலியல் வழக்கில் கைது செய்த போலீசார்!

17 வருஷங்களா குகைக்குள் வாழ்ந்த குற்றவாளி.. பாலியல் வழக்கில் கைது செய்த போலீசார்!

கடந்த 2002 ம் ஆண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஏகப்பட்ட குழந்தைகளைக் கடத்தியதாகவும், தொடர்ந்து வன்கொடுமை முயற்சிகளில்  ஈடுபட்டதாகவும் சாங் ஜியாங் என்பவர் மீது சீனா போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவரான சாங் ஜியாங் மீதான அந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் நிரூபிக்கப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார்.

china

அதன் பின்னர் பாதுகாப்பு போலீசாரை ஏமாற்றி சிறையிலிருந்து தப்பித்து சென்ற சாங் ஜியாங்கை வருஷ கணக்கில் போலீசார் தேடி வந்தனர். எல்லா விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள் என்று தொடர்ந்து தேடி வந்த போலீசார், ஒரு கட்டத்தில் அவர் எங்கு தலைமறைவானார் எனத் தெரியாமல் திகைத்து வந்தனர். வெவ்வேறு வழக்குகள் அதன் பின்னர் தீர்வு காணப்பட்டு வந்தாலும், போலீசார் சாங் ஜியாங்கை தேடுவதை நிறுத்தவேயில்லை. 17 வருடங்களாக தொடர்ந்து வந்த தேடுதல் வேட்டை சமீபத்தில் முடிவுக்கு வந்திருந்தது.  சமீபத்தில் யோங்க்ஷன் பகுதி போலீசார் சாங் ஜியாங் குறித்த தகவலை தெரிவித்தனர். யோங்க்ஷன் பகுதி போலீசார் கொடுத்த தகவலின் படி, சாங் ஜியாங்கின் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள மலைகளில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இத்தனைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் அந்த பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். 
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மீண்டும் தேடத் துவங்கினார்கள். மலைகளில் தேடியும் எந்த பயனும் கிடைக்காதால், ட்ரோன் மூலம் சாங் ஜியாங்கைத் தேட முடிவு எடுத்தனர். அதன்படி உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று துல்லிய கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்களை மலைப்பகுதியில் பறக்க விட்டனர். அப்போது ஒரு ட்ரோன் காட்சி மூலம் நீல நிறத்தில் ஒரு சிறிய கூரை ஒன்று இருப்பதனை கண்டறிந்தனர். மேலும் மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களும் சில ட்ரோன் கேமராவில் சிக்கன. பின்னர் மலைச் சரிவில் அந்த கூரை இருப்பதனை உறுதி செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

china

நம்மூர் லலிதா ஜூவல்லரி திருடர்களைப் போல அந்த கூரையின் அடியில் ஒரு சிறிய குகை ஒன்றை ஏற்படுத்தி, ரொம்ப வசதியாக தலைமறைவாக இருந்த சாங் ஜியாங்கையும் போலீசார் கைது செய்தனர். மலைகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்ந்து வந்ததாகவும், இப்பகுதிக்குள் யாரும் வரமுடியாது எனத் தெரிந்தே அங்கு தலைமறைவானதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.