பக்ரீத் ஆடு-தீபாவளி பட்டாசு: கொளுத்திப்போட்ட பாஜக எம்.பி., வெடிக்கும் நெட்டிசன்கள்

பக்ரீத் ஆடு-தீபாவளி பட்டாசு: கொளுத்திப்போட்ட பாஜக எம்.பி., வெடிக்கும் நெட்டிசன்கள்

அடிக்கடி சர்ச்சையை எழுப்பும் பாஜக எம்.பி. சாக்‌ஷி மகாராஜ், தற்போது பக்ரீத் ஆடுகள், தீபாவளி பட்டாசுகள் குறித்த சர்ச்சையை கொளுத்தி போட்டிருக்கிறார். இதனால் வெடிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

கொரோனா மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக ராஜஸ்தான், ஒடிசா, சிக்கிம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தடை போடப்பட்டிருக்கிறது. அதே நேரம், நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு தடை போடுவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறது.

பக்ரீத் ஆடு-தீபாவளி பட்டாசு: கொளுத்திப்போட்ட பாஜக எம்.பி., வெடிக்கும் நெட்டிசன்கள்

இதனால் உத்தரபிரதேசம் உன்னாவ் பாஜக எம்.பி., சாக்‌ஷி மகாராஜின், ‘’ஆடு பலியிடப்படாமல் பக்ரீத் கொண்டாடப்பட்டால் பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடப்படும். ஆகவே அதுவரைக்கும் யாரும் மாசு குறித்து பேசக்கூடாது’’என்று தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

சாக்‌ஷி மகாராஜின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக மாறி, விவாதமாகியிருக்கிறது.