நீலகிரி: ஊட்டியில் பூத்துக்குலுங்கும் டோலியா, திபோசைனா மலர்கள்

 

நீலகிரி: ஊட்டியில் பூத்துக்குலுங்கும் டோலியா, திபோசைனா மலர்கள்

நீலகிரி மாவட்டம் உதகையில் பூத்துக்குலுங்கும் டோலியா மற்றும் திபோசைனா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நீலகிரி: ஊட்டியில் பூத்துக்குலுங்கும் டோலியா, திபோசைனா மலர்கள்


ஊட்டி – தொட்டபெட்டா மலைப்பாதை, கல்லட்டி மலைபாதையில் உள்ள மலை முகடுகளில் நீல நிறத்தில் டேலியா மலர்கள் பூத்து குலுங்குகிறது. இதனால்
மலை முழுவதும் நீல நிறத்தில் ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. அதேபோன்று ஊட்டி – கூடலூர் சாலையில் மஞ்சள் நிறத்திலான திபோசைனா மலர்களும்பூத்து குலுங்குகிறது.

இந்த மலர்கள் சந்தன மணம் வீசுவதால் அனைவரையும் கவர்ந்து வருகிறது. தற்போது வார விடுமுறை நாட்கள் என்பதால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பூக்களின் அருகாமையில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.