ஈரோடு: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை திறந்துவைத்த செங்கோட்டையன்

 

ஈரோடு: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை திறந்துவைத்த செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்மாண்டம் பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தினை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

ஈரோடு: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை திறந்துவைத்த செங்கோட்டையன்

இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த 35 நபர்களுக்கு சிறு வணிக கடன்களையும் அவர் வழங்கினார். தொடர்ந்து, நம்பியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 200 பயனாளிகளுக்கு கன்று வளர்பு கடனுதவிகளையும், 144 பயனாளிகளுக்கு
ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

மேலும், ஒழலக்கோயில் ஊராட்சி கருக்கம்பாளையத்தில் குளம் தூர்வாரி
புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கோட்டாட்சியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.