வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதிக்கு மத்திய அரசு அனுமதி!

 

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதிக்கு மத்திய அரசு அனுமதி!

யுபிஐ பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதற்கு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமான என்பிசிஐ அனுமதி அளித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதிக்கு மத்திய அரசு அனுமதி!

இதன்படி கூகுள் பே போன்ற நிறுவனங்களை போல, வாட்ஸ் அப் அதன் செயலி மூலமாக நிதி பரிமாற்ற சேவையை அளிக்கும் என தெரிகிறது. இதற்கான சோதனை முயற்சிகளை 2018ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்ட வாட்ஸ்அப் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்தது. இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் யுபிஐ பயன்படுத்தி பணம் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த என்பிசிஐ என அழைக்கப்படும் தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது.

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதிக்கு மத்திய அரசு அனுமதி!

ஏற்கனவே சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட சதவீத வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வாட்ஸ் அப் அளித்து வந்த நிலையில், என்பிசிஐ அனுமதியின் மூலமாக இனி 2 கோடி பேருக்கு இந்த சேவையை வாட்ஸ்அப் வழங்கும் என தெரிகிறது. எனினும், ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த பிறகு தான் நிதி பரிமாற்றத்தை முழுமையான அளவிலான கட்டத்திற்கு வாட்ஸ்அப்பினால் கொண்டு செல்ல முடியும் என தெரிகிறது. ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் பட்சத்தில், இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த சேவையை ஏற்படுத்த முடியும் என தெரிகிறது.

இந்த அனுமதிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ்அப் மூலமாக பணப்பரிமாற்றம் செய்வதற்கு கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளார். மேலும் 140க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர், தங்கள் பணத்தை பாதுகாப்பாக அனுப்புவதற்கு வாட்ஸ்அப் சிறந்த தளமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதிக்கு மத்திய அரசு அனுமதி!

வாட்ஸ்அப் செயலியில் பேமண்ட் ஆப்ஷன் ஏற்கனவே உள்ளதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆண்டிராய்ட் போனில் வாட்ஸ்அப் செயலியை நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர், பணம் அனுப்புவதற்கு முன்பு யாருக்கு அனுப்ப விரும்புகிறோமோ அந்த நபரை கான்டாக்டில் இருந்து தேர்வு செய்து கிளிக் செய்தால், அதில் சாட்டிங் ஆப்ஷன் கிடைக்கும். அதில் உள்ள டாகுமெண்ட் அட்டாச்மெண்ட் பைலுக்கான பட்டனை தட்டி உள்ளே சென்றால் பேமண்ட் என்ற ஆப்ஷன் இருப்பதை பார்க்கலாம். அதில் அனுப்பப்படும் தொகை, உள்ளிட்ட தகவல்களை அளித்து பணம் அனுப்பலாம் என தெரிகிறது.

இது தொடர்பான புதிய அப்டேட் விரைவில் வரும் என்றும் அதில், முந்தைய பரிமாற்றங்கள், உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ளும் ஆப்ஷன்களும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ். முத்துக்குமார்